RSS

சான்றோன் – தமிழ் பிரியன் நசீர்

31 Oct

10744638_477404079068301_577511459_nசொற்சுவை
மெருகேற
சுழன்றெழும்
காற்றொலி கோர்த்து

பற்களெனும்
உளியாலே
பக்குவமாய்
மொழி செதுக்கி

திக்கெட்டு மாந்தருக்கும
தெவிட்டாத தமிழமுதை
முக்கி மொழிந்தோரெல்லாம்
முறைக்கென்னவோ
சான்றோராகலாம்..!!

கற்குணம் உள் கொண்டு
காட்சிக்குப் பொன்னேந்தி
முற்குண அம்பெய்து
மூத்தோர் தம் சொல் மறைத்து
பற்பல சபையேறி
பாடிக்களித்தோரெலாம்
பார்வைக்கு வேண்டுமெனில்
பகுத்தறிவு ஞானியாகலாம்..!!

கற்றோர் குலந்தனிலே
கதிபெற்றோர் யாரெனிலே
உற்றார் பெரியவர் தம்
உளம் நோகா சொற்பேசி
குற்றம் குறையுடையார்
கொடுக்கும் தீமைப் பொறுத்து

மற்றோரையும் மானுடனாய்
மதிக்கின்ற தலைமகனே
மானுட வர்க்கத்திலேயே
மதி நிறைச்சான்றோனாவான்.
418487_134054253403287_225976198_n-MIX 1தமிழ் பிரியன் நசீர்

Advertisements
 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: