RSS

‘சிரித்து வாழவேண்டும்’ – தாஜ்

06 Nov

imagesCACKFZ5Avகாலையில்…
டீ கடை பக்கம் போனேன்.
நண்பர்கள், ஊர்காரர்களுக்கு இடையே
இன்னொருவனும் தெரிந்தான்.
என் வயதிலும் குறைந்தவன்
சிரித்தப்படிக்கு…
அங்கே உலாத்திக் கொண்டிருந்தான்.
ஊரில் காண்டிராத முகம்.
புதிதாகவே தெரிந்தான்.
நான், டீ சொன்ன போது
என்னைப் பார்க்கவும் சிரித்தான்.

டீ சாப்பிடுகிறாயா?
சிரித்தான்.
டீ வாங்கித் தந்த போது….
சிரித்தான்.
உனக்கு எந்த ஊர்?
சிரித்தான்.
என்னப் பெயர்?
சிரித்தான்.
மனைவி குடும்பமெல்லாம் எங்கிருக்கிறது?
கூடுதலாகச் சிரித்தான்.
மகன் மகள்கள் எல்லாம்?
பெரிதாக சிரித்தான்.

பதில் சொல்…
நாலாப் பக்கமும் பார்த்து சிரித்தான்.
பேசத் தெரியாதா?
நல்லா தெரியுமே.
பின்னே… பேசுவதற்கென்ன?
நீங்கள் ஏன் சிரிக்க மாட்டேன் என்கின்றீர்கள்?

அங்கிருந்து
திரும்பி நடந்த வழியெல்லாம்
சிரித்துக் கொண்டே வந்தேன்!
10494782_688808787855534_3669785479586600242_nTaj Deen

Advertisements
 

Tags:

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: