RSS

Monthly Archives: December 2014

அரங்கேற்ற நேரம் / தாஜ்

பார்வைக்குத் திறக்கப்பட்டது
என் சித்திரக் கூடம்
கருப்பின் பரப்பில்
மையலான சித்திரம்
எக்ஸ்ரே பாணி
நிர்வாண
காட்சிகளைப் பரப்பியிருந்தேன்.

மூளையின் மூளி
முதுகு தண்டின் வளைவு
கண்களின் ருசி
கால்களின் சதிர்
கைகளின் தாளம்
நாவின் ஜதி
விரல்களின் அரக்கம்
நகங்களின் ரத்தப் பூச்சு
பற்களின் மலுங்கள்
குறியின் மகர்ந்தம்
புத்தகப் படுக்கைச் சுகம்
என் லார்வா புழு
வண்ணத்துப் பூச்சி காலம்
பின் மறந்து போன சிரிப்பு
அர்த்த நாரீஸ்வர இருப்பு
உயிர் வதைப்பின் வலி
ஹிருதய அழுக்கின் நாற்றம்
காலாணி நடப்பின் கோணல்
இறக்கையற்றப் பறப்பென. Read the rest of this entry »

Advertisements
 

பன்னீர் தேசத்தில் வெந்நீரே ஆட்சி ! தண்ணீரே காட்சி ! மேட்டூர் என்பார்

1503519_742113089200756_7053396464294654383_n

பன்னீர் தேசத்தில்
வெந்நீரே ஆட்சி !
தண்ணீரே காட்சி !
மேட்டூர் என்பார்
முல்லைப்
பெரியாறென்பார்
சென்னைச் சாலையெங்கும்
கூவமே
மாட்சியென்பார் !
இதுவும் போதாதென்றால்
பார்…பார்
ஊரெங்கும்
டாஸமாக்
நதியென்பார் !
அதுவே
தமிழகத்தின் கதியென்பார் ! Read the rest of this entry »

 

பொய்….!

10891847_1611154315775026_9159751964512341237_n

மெய்யை தீண்டாமையாக்கி
உயர்ந்து வளர்ந்து
வலம் வருகுது

இல்லாததை இருப்பதாக்கி
இட்டுக்கட்டும் உண்மையின்
இருட்டடிப்பு

தொட்டதற்கெல்லாம்
பொய்சொல்லி துலங்காமல்
போகவைக்கும் துன்பம்

வாய்மையை விலைபேசி
விற்றுவிட்ட கொடூரம்

காற்றடைத்த பையில்
மெய் பொய்யே
காற்று (உயிர்) என்றும்
மெய்யே மெய்யே!

(சங்கம் அப்துல் காதர்)

ராஜா வாவுபிள்ளை

 

ஃபேஸ்புக் நிறைய நேரத்தை சாப்பிட்டு வாசிப்பு குறைந்து விட்டது

264413_265143160296275_1281688418_nவாசிப்பும் நானும் -நிஷா மன்சூர்

நூலகங்களில் பழியாய்க் கிடந்தவன் நான்,
நான்கு கார்டுகள் இருந்தது எனக்கு,ஆனபோதும் என் மனம்கவர்ந்த ஐந்தாவது புத்தகத்தை ஒருபோதும் விட்டுவிட்டு வந்ததில்லை
அது என் இடுப்புக்குள் பத்திரமாக இருக்கும்,
ஆனால் படித்து முடித்தபிறகு அது நூலக வரிசையில் அழகாக
இடம்பிடித்து விடும்.

90-களில் நான் விடுப்பெடுத்தால் முதலாளி வந்து சந்திக்கும் இடம் நூலகம்தான்…
“பாய்,கொஞ்சம் அவசர வேலை இருக்கு
ஒரு ஒன் அவர்ல போயிரலாமே”
என்று கூலாக சொல்லுவார்….. Read the rest of this entry »

 

சலவை செய்யப்பட்ட வெளிநாட்டு பெண்களும்/வியர்வை வழியும் உள் நாட்டு ஜனங்களும்

The Acacia Mall, இன்றைக்கு கம்பாலாவில் உள்ளவர்கள் நானும் போய்விட்டு வந்தேன் என்று உரத்துச் சொல்லும் இடங்களில் ஒன்றாகிப் போனது. ஆகாத வற்புறுத்தலின் பேரில் இன்று நானும் அழைத்துச் செல்லப்பட்டேன் அங்கே.

சலவை செய்யப்பட்ட வெளிநாட்டு பெண்களின் முகங்களும், பெரும்பாலும் கள்களும். என்ன வேண்டுமோ வாங்கிக்கோ என்று பரத்தி வைக்கப்பட்ட பொருட்கள், வெளியே 10 டாலர் என்றால் இங்கே குறைந்தது 15 டாலர்தான், என்றாலும் வாங்குவது அக்காஸியா என்று வாங்கிப் போடும் ஒரு கூட்டம். Read the rest of this entry »

 

Tags:

அன்பேவழி….!

10396277_1604874293069695_5432876738405923552_n

பூமியினில் புனிதமாய்
ஆதிமுதல் வாழ்வதற்கும்
அந்தமாய் வானுலகம்
சேர்வதற்கும் அன்பேவழி

பால்புகட்டும் தாயிக்கும்
பசியுணரும் சேயிக்கும்
காதல்செய்யும் தம்பதியர்க்கும்
உலகில்வாழ அன்பேவழி

காசுபணம் கேட்க்காது
பிரதிபலன் பார்க்காது
அடைக்கும் தாளில்லாது
கொடுதுப்பெற அன்பேவழி

அளவில்லாது அருளுவது
அளந்துவிட்டால் குறைந்துவிடும்
கொடுக்கக்கொடுக்க கூடுவது
சென்றுசேர அன்பேவழி

மடைதிறந்த வெள்ளம்போல்
வற்றாத நதியைப்போல
இறையனும் கடல்சேர
மானுடர்க்கு அன்பேவழி

(சங்கம் அப்துல் காதர்)கவிதை ஆக்கம் ராஜா வாவுபிள்ளை

 

2015 சென்னை புத்தகக் கண்காட்சி

10857804_771666689535626_831427852283972574_nமுகநூல் நண்பர்களுக்கு – சென்ற ஆண்டு போலவே இந்த வருடமும் நடைபெறவிருக்கும் புத்தக கண்காட்சியை முன்னிட்டு  2015 சென்னை புத்தகக் கண்காட்சி என்ற முகநூல் பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. ஆர்வமிருக்கும் அனைவரும் இதில் இணைய வேண்டும் என்றும், உங்களுக்கு தெரிந்த, உங்கள் பக்கத்தில் தென்படும் புதிய நூல் குறித்த விவரங்களை இந்த பக்கத்தில் பதிக்க வேண்டும் என்றும் அன்புடன் கேட்டு கொள்கிறோம். நன்றி.

10665874_10204722651775745_7059755186017600930_nகே. என். சிவராமன்