RSS

சலவை செய்யப்பட்ட வெளிநாட்டு பெண்களும்/வியர்வை வழியும் உள் நாட்டு ஜனங்களும்

26 Dec

The Acacia Mall, இன்றைக்கு கம்பாலாவில் உள்ளவர்கள் நானும் போய்விட்டு வந்தேன் என்று உரத்துச் சொல்லும் இடங்களில் ஒன்றாகிப் போனது. ஆகாத வற்புறுத்தலின் பேரில் இன்று நானும் அழைத்துச் செல்லப்பட்டேன் அங்கே.

சலவை செய்யப்பட்ட வெளிநாட்டு பெண்களின் முகங்களும், பெரும்பாலும் கள்களும். என்ன வேண்டுமோ வாங்கிக்கோ என்று பரத்தி வைக்கப்பட்ட பொருட்கள், வெளியே 10 டாலர் என்றால் இங்கே குறைந்தது 15 டாலர்தான், என்றாலும் வாங்குவது அக்காஸியா என்று வாங்கிப் போடும் ஒரு கூட்டம்.ஒரு இடைவெளியில், கண்ணில் பட்டது, உயர்குடி மெல்லிசான இந்தியப் பெண், லேட்டஸ்ட் டைப் பிராடோ, ஷெல்ஃப் டிரைவிங், லாவகமாக ஒதுக்கி நிறுத்தி, நாசுக்காக தலைக் கண்ணாடியை துடைத்து, ஹாய், ஐ ஆம் ஹியர், வாட் த ஹெல் வித் யூ, கம் குயிக், ஐ ஆம் கிவிங் 10 மினிட்ஸ் டூ யூ. ஒரு சிறிய கத்தலில் வெளியே ஒரு அலட்சியப் பார்வை, கேட்டவர்களில் நானும் ஒருவன் என்பதில் அலாதி திருப்தி. அவள் கூப்பிட்டவன் வந்தானா என்று நான் பார்க்கவில்லை, என்றாலும் வந்திருப்பான், டேக் அவேயில் சிறிது நேரம் செலவழித்து குழந்தைகளுக்கான சிப்ஸும் கோழிப் பொரியலும் வாங்கி நான் உள்ளே போய் விட்டேன். 5, அல்லது 6 வது மாடியில் கார் ஓடும் ரோடு, பாதுகாப்பு கருதி, வண்டியை மாடிக்கே கொண்டு சென்று பார்க் செய்யும் பாங்கு. விற்பனையில் டிக்கட் குலுக்கி, முதல் பரிசு கார் முகப்பில் அலங்கரிக்கப்பட்டு காட்சிக்கு.

கத்தைகள் இருந்தால் சொத்தை எதுவும் இல்லாமல் எல்லாமே கிடைக்கிறது, வீக் எண்டுகளும், விழாக்கால முடிவுகளும் கை கோர்த்து கதை சொல்கின்றன. என்றாலும், இந்த கம்பாலாவில் இருந்து கொண்டு இன்றைக்குத்தான் முதன்முதலாக அங்கே போனேன் என்று சொல்வது இரகசியமாகவே இருக்கட்டும், வெளியில் தெரிந்தால் ஒரு புழுவைப் பார்ப்பது போல் பார்க்கக் கூடும், மாலை 6 மணிக்குப் போய், 8 மணிக்கு வீடு வந்தாச்சு. ஒரு ஓய்வு நாள், பண்டிகை நாள், ஓய்வு வேண்டி இருந்தாலும், நமக்கென்ன பண்டிகை என்று சொன்னாலும், அடைந்து கிடக்கும் பெண்களுக்காக என்று போய் வருவது கட்டாயமாகி விட்டது !

10813_488830407926340_2010597110637474255_nRaheemullah Mohamed Vavar

Advertisements
 

Tags:

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: