RSS

ஃபேஸ்புக் நிறைய நேரத்தை சாப்பிட்டு வாசிப்பு குறைந்து விட்டது

31 Dec

264413_265143160296275_1281688418_nவாசிப்பும் நானும் -நிஷா மன்சூர்

நூலகங்களில் பழியாய்க் கிடந்தவன் நான்,
நான்கு கார்டுகள் இருந்தது எனக்கு,ஆனபோதும் என் மனம்கவர்ந்த ஐந்தாவது புத்தகத்தை ஒருபோதும் விட்டுவிட்டு வந்ததில்லை
அது என் இடுப்புக்குள் பத்திரமாக இருக்கும்,
ஆனால் படித்து முடித்தபிறகு அது நூலக வரிசையில் அழகாக
இடம்பிடித்து விடும்.

90-களில் நான் விடுப்பெடுத்தால் முதலாளி வந்து சந்திக்கும் இடம் நூலகம்தான்…
“பாய்,கொஞ்சம் அவசர வேலை இருக்கு
ஒரு ஒன் அவர்ல போயிரலாமே”
என்று கூலாக சொல்லுவார்…..

இப்போதும் மின்நூலாக எல்லா புத்தகங்களும் கிடைத்தாலும் பதிப்பிக்கப்பட்ட புத்தகங்களின் மணமும் அனுபவமும் அலாதியானவை.

சாப்பிடும்போதெல்லாம் புத்தகம் இல்லாமல்
இருந்ததில்லை என் இன்னொரு கை.

இப்போதும் காரில் ஒரு சின்ன லைப்ரரியும்
அலுவலக அறையில் சில புத்தகங்களும்
படுக்கையறையில் சில புத்தகங்களும்
ஏன்,பாத்ரூமில்கூட சில புத்தகங்களும் உண்டு…!!

ஆனால் சமீபகாலமாக இந்த ஃபேஸ்புக் நிறைய நேரத்தை சாப்பிட்டுவிடுவதையும் வாசிப்பு குறைந்து விட்டதையும்
வருத்தத்துடன் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

வாங்கி கிட்டத்தட்ட ஒரு வருடமாகியும் இன்னும் படிக்காத
சாதத் ஹசன் மாண்ட்டோவின் முழுத் தொகுப்பும்
இரா.நடராசனின் சிறுகதைத் தொகுப்பும்
சீறாப்புராணத்தின் உரையும்
இன்னும் சில புத்தகங்களும் என் குற்ற உணர்ச்சியை உறுத்தாமலில்லை…!!

10525943_492666037543985_1109437642086314996_nநிஷா மன்சூர்
Advertisements
 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: