RSS

பன்னீர் தேசத்தில் வெந்நீரே ஆட்சி ! தண்ணீரே காட்சி ! மேட்டூர் என்பார்

31 Dec

1503519_742113089200756_7053396464294654383_n

பன்னீர் தேசத்தில்
வெந்நீரே ஆட்சி !
தண்ணீரே காட்சி !
மேட்டூர் என்பார்
முல்லைப்
பெரியாறென்பார்
சென்னைச் சாலையெங்கும்
கூவமே
மாட்சியென்பார் !
இதுவும் போதாதென்றால்
பார்…பார்
ஊரெங்கும்
டாஸமாக்
நதியென்பார் !
அதுவே
தமிழகத்தின் கதியென்பார் !

இங்கே…
கேரளக் கரையோரம்
சூரியன்
ஒளிந்து கொண்டதால்
ஊரெங்கும்
இலைகளின்
நடனக் குளியல் !

வெயிலைவிட்டு
விடுதலைபெற்ற
உற்சாகத்தில்
மகளிரணிபோல்
மரங்கள் போடும்
ஆனந்த மழையாட்டம் !

காற்றுக்கு யார்
கால்கட்டு போடுவது ?
குளிர் பெண்ணை
இழுத்துக்கொண்டு
அங்கும் இங்கும்
அவன்
ஓடும் ஓட்டம்
அடடா…
சிலிர்க்கிறதே !

குமரியே …
நீ
கன்னியா குமரியா
என்று
ஊரார் கேட்டால்
இயற்கை அழகில்
இறைவன் அருளில்
என்றுமே
நான்
கன்னிதான்
குமரிதான்
என்று
அழகாகச் சொல் !

Abu_HaashimaAbu Haashima

Advertisements
 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: