RSS

Monthly Archives: January 2015

ஆதாரம்….!

4.happiness-photos

பூமியில் விளைச்சலுக்கு
உழவனின் உழைப்பே ஆதாரம்
ஆகாயம் பொழிவதற்கு
ஆதவனின் உக்கிரமே ஆதாரம்

இயற்கையின் அழகிற்கு
அரிதாரம் இன்மையே ஆதாரம்
செயற்கையின் மாயைக்கு
மயங்கும் மனிதமனமே ஆதாரம்

அன்னையின் அன்பிற்கு
சுயநலம் இன்மையே ஆதாரம்
பிள்ளையின் பாசத்திற்கு
வளர்ப்பு முறையே ஆதாரம் Read the rest of this entry »

Advertisements
 

உறுப்புகளின் அறிகுறிகள் !

Doctorநமக்கு என்னென்ன நோய் என்பதை நம் உறுப்புகளின் அறிகுறிகள் மூலமே தெரிந்து கொள்ளலாம்:-

கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி? :

சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேறமுடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும். தீர்வு : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும். Read the rest of this entry »

 

விசாரணைக் கைதி விருது பெற்றார்!

விசாரணைக் கைதி மரணம்…. இந்த மாதிரி செய்திதானே கேள்விப்பட்டிருப்போம்… அது என்ன விருது??

ஆமாங்க, ஒருவரை கைவிலங்கு போட்டு விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து வந்த போலீஸ் அதிகாரி, அவரை ஒரு இருக்கையில் உட்கார வைத்துவிட்டு, பதிவு புத்தகத்தில் எழுதுவதற்காக உட்காருகிறார். உடனே ‘திடீர்’ மாரடைப்பு காரணமாக நிலைகுலைந்து சரிகிறார்.

இதை சற்றும் எதிர்பாராத அந்த கைதி, உடனே பாதுகாப்பு அதிகாரிகளைக் கூப்பிடுவதற்காக, காலால் கதவை உதைத்து சப்தமிடுகிறார். Read the rest of this entry »

 

” யார் இந்த அரை நிர்வாண பக்கிரி?”…/ சொல் காந்தி சொல்…

10956068_780722188673179_1363418548_n

அய்யோ காந்தி
அநியாயமாக
சுடப்பட்டு
செத்துப் போனாயே
காந்தி !

விடுதலையாவது
ஈரமண்ணாவது என்று
ஆங்கிலேயனிடம்
மன்னிப்புக் கேட்டிருந்தால்
அவாள் வரலாற்றில்
நீயும் தியாகியாகி
இருப்பாயே
காந்தி ! Read the rest of this entry »

 

பிரெஞ்சு அரசாங்கம் லஸ்ஸானாவை கவுரவித்து உடனடியாக பிரெஞ்சு குடியுரிமை வழங்கியது.

10425882_766833046736278_181568082571794217_n

இப்போதைய பிரெஞ்சு தேசத்து கதாநாயகன்.
பத்து உயிர்களுக்கு மேல்
தன் உயிரை துச்சமாக மதித்து
காப்பாற்றியவர் லஸ்ஸானா.
பிரெஞ்சு அரசாங்கம் லஸ்ஸானாவை
கவுரவித்து உடனடியாக
பிரெஞ்சு குடியுரிமை
வழங்கியது.

ஏழு உயிரை எடுத்தான்
ஒரு முஸ்லிம்.ஆனால் உலகம் ஒரு சமூகத்தையே குற்றவாளி கூண்டில் நிறுத்தியது.

பத்து உயிரை காப்பாற்றினான் மாலியை தாய்நாடாக கொண்ட 24 வயது இஸ்லாமிய இளைஞரான இந்த முஸ்லிம்.லஸ்ஸானா. குடியுரிமை வழங்கும் விழாவில் பிரான்சின் முக்கிய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

இதற்கும் அந்த முஸ்லிம் சமூகத்துக்கும் சம்பந்தமே இல்லையா! அப்படித்தானே!
அட ஒங்க தலையிலே எர்வாமேட்டினை தடவ! அப்பவாவது
முடிக்கு பதில் மூளையாவது வளருதான்னு பார்ப்போம்!

1525355_754789944607255_1409781901140235152_nMohamed Rafiudeen
 

எதிலும் அவசரம் !?

6924516-just-relax-beachஇன்றைய காலசூழலில் எங்கும் அவசரம் எதிலும் அவசரம் எல்லாம் அவசரம் என்று அவசர மயமாகிவிட்டதை தினம் தினம் நாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். அர்ஜன்ட் என்கிற வார்த்தையை அதிக பட்சமாக அனுதினமும் நடைமுறையில் நாம் சொல்லி வருகிறோம் பெரும்பாலும் சாதாரணமாக இந்த வார்த்தையை உபயோகித்தாலும் காலப்போக்கில் நவீனங்கள் தலைதூக்கிய பிறகு இன்றைய நிலையில் இந்த வார்த்தை உயிர்பெற்று தற்போதைய வாழ்க்கை முறையாவும் அவசரமாகவே ஆகிவிட்டது என்பதே உண்மை. Read the rest of this entry »

 

கதாபாத்திரங்களின் வெற்றியில் வாழ்கிறேன்! – விஜய் ஆண்டனி பேட்டி – தி இந்து

கதாபாத்திரங்களின் வெற்றியில் வாழ்கிறேன்! – விஜய் ஆண்டனி பேட்டி – தி இந்து.

‘நான்’ படத்தின் மூலம் இயல்பாகத் தன்னால் நடிக்கவும் முடியும் வெற்றிப்படங்களைத் தயாரிக்கவும் முடியும் என்று காட்டியவர் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி.

இவரது நடிப்பில் ‘இந்தியா – பாகிஸ்தான்’ விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், அடுத்து பிச்சைக்காரன், திருடன் ஆகிய இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ‘தி இந்து’ தமிழுக்காக அவரைச் சந்தித்து உரையாடியதிலிருந்து…

மாயூரம் வேதநாயகம் பிள்ளை உங்களது பாட்டனார் என்று படித்ததாக நினைவு. அது நிஜம்தானா?

ஆமாம்! தமிழின் முதல் நாவலான ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ எழுதினாரே அவரேதான். அவர் என் தாத்தாவின் அப்பா. எழுத்து மட்டுமல்ல, அவர் பாடல்களை இயற்றி மெட்டமைத்து பாடவும் செய்வார் என்று என் உறவினர்கள் சொன்னபிறகுதான் எனக்குத் தெரியவந்தது. அப்பாவைச் சிறுவயதிலேயே இழந்துவிட்டேன். Read the rest of this entry »