RSS

பெயர்களில் வாசனை மிக்கது முஹம்மது !

04 Jan

Name-of-Prophet-Muhammad-PBUH

பெயர்களில்
வாசனை மிக்கது
முஹம்மது !

அதை …
சொல்லச் சொல்ல
வாய் மணக்கும்
எண்ண எண்ண
மனமும் மணக்கும் !

அதுதான் பெண் நேசனை
இறை நேசனாக்கியது !
மது நேசனை
முஹமது நேசனாக
மாற்றியது !

அகம் கெட்டுப்
போன அரபிகளை
கை நகம் தொட்டு
குணப்படுத்தியது !

பெண் சிசுவை
மண்ணில் புதைத்து
மகிழ்ந்தவர்களை
ஷஹீதுகளாக மாற்றி
மண்ணில்
விதைக்க வைத்தது !

கற்களையே கடவுளென
நம்பியவர்களை – அந்த
கற்களையும் படைத்தவன்
கல்லாகாத
கடவுளென பாடம்
கற்க வைத்தது !

அகிலமே
அனாதையாக
அழுத போது
அகிலத்திற்கே
அருட்கொடையாக வந்தது !

அண்ணலே
எங்களை உய்விக்க வந்த
வள்ளலே !
இம்மையும்
மறுமையும்
எங்களுக்கு வசமாக
வாழ்ந்து காட்டிய
செம்மலே !
உங்கள் பிறப்பால்
பூரித்தது
இந்த பூவுலகம் !
நாளை
உங்கள்
ஷபாஅத்தால்
எங்களுக்கு
தாள்திறக்கும்
பூஞ்சுவனம் !

ஸல்லல்லாஹு அலா முஹம்மது
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்

Abu_Haashimaஅபு ஹசீமா வாவர்
Abu Haashima

Advertisements
 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: