RSS

” யார் இந்த அரை நிர்வாண பக்கிரி?”…/ சொல் காந்தி சொல்…

28 Jan

10956068_780722188673179_1363418548_n

அய்யோ காந்தி
அநியாயமாக
சுடப்பட்டு
செத்துப் போனாயே
காந்தி !

விடுதலையாவது
ஈரமண்ணாவது என்று
ஆங்கிலேயனிடம்
மன்னிப்புக் கேட்டிருந்தால்
அவாள் வரலாற்றில்
நீயும் தியாகியாகி
இருப்பாயே
காந்தி !

உன்னை
சுட்டுக் கொல்ல வந்த
கோட்சே
தன்னைத்தானே
சுட்டுக் கொண்டு
செத்திருப்பானே !

காந்தி …
நீ செய்தது
சாதாரண துரோகமா ?
அது…
தேசத் துரோகம் !

ஒரு கோடீஸ்வர
தேசத்தை
பிச்சை தேசமாக
பொத்தல் போட்டு
காட்டிவிட்டாயே
பொத்தல் விழுந்த
உன் ஆடைகளால் !

உன் பரதேசி கோலத்தைக்
கண்டுதானே
வாய்க் கொழுப்பெடுத்த
சர்ச்சில் கேட்டான்…
” யார் இந்த
அரை நிர்வாண பக்கிரி?” என்று !

நாட்டு மக்கள்
கோவணத்துக்கே
வழியின்றி அலைந்தால்
உனக்கென்ன ?
கோடீஸ்வரனுக்கு
மகனாகப் பிறந்த நீ
அரை நிர்வாணி ஆகலாமா ?
கந்தலைக் கட்டலாமா ?

மெத்தப் படித்த
பாரிஸ்டர்
நீ
நல்ல உடை
உடுத்த வேண்டாமா ?
நாகரீகம் பேண வேண்டாமா ?

அய்யோ காந்தி …
நேற்று
பார்த்தாயா…..
பார்த்தாயா….
ஒரு டீக்கடை தொழிலாளி
பத்து லட்சம் மதிப்பில்
கோட்டுப் போட்ட
காட்சியை நீ
பார்த்தாயா ?

அயல்நாட்டான்
பொண்டாட்டிக்கு
பட்டுப் புடவை நூறு
பரிசளித்த
பரவசத்தை நீ
பார்த்தாயா ?

நிஜாம் மாளிகையில்
நூறுவகை விருந்துண்ட
ஆடம்பரத்தை நீ
பார்த்தாயா ?

கோடானுகோடி பணம்
வாரி இறைத்து
எரியவிட்ட
விளம்பர வெளிச்சத்தை
நீ பார்த்தாயா ?

பார்க்காமலா இருப்பாய் …
அதுதான்
சிரித்துக் கொண்டுதானே
இருக்கிறாய்
கரன்சித் தாள்களில் !

இப்போதாவது சொல்
காந்தி !

ஏருழவன்
எலிக்கறி தின்று செத்தாலும்
தானைத்தலைவன்
தலைப்பாகையோடு
தங்கத்தால்
பெயரெழுதி
பட்டாடை உடுக்கத்தானே
போராடி
விடுதலை வாங்கித் தந்தாய் ?

இது
தேசத்துரோக
குற்றமில்லையா ?

சொல் காந்தி
சொல்…

ஆக்கம்

ABU HASEEEMAA

Abu Haashima
Advertisements
 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: