RSS

விசாரணைக் கைதி விருது பெற்றார்!

28 Jan

விசாரணைக் கைதி மரணம்…. இந்த மாதிரி செய்திதானே கேள்விப்பட்டிருப்போம்… அது என்ன விருது??

ஆமாங்க, ஒருவரை கைவிலங்கு போட்டு விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து வந்த போலீஸ் அதிகாரி, அவரை ஒரு இருக்கையில் உட்கார வைத்துவிட்டு, பதிவு புத்தகத்தில் எழுதுவதற்காக உட்காருகிறார். உடனே ‘திடீர்’ மாரடைப்பு காரணமாக நிலைகுலைந்து சரிகிறார்.

இதை சற்றும் எதிர்பாராத அந்த கைதி, உடனே பாதுகாப்பு அதிகாரிகளைக் கூப்பிடுவதற்காக, காலால் கதவை உதைத்து சப்தமிடுகிறார்.

உள்ளே வரும் அதிகாரிகள், நிலைகுலைந்த போலீஸ் அதிகாரியைப் பார்த்தவுடன், மருத்துவக்குழுவை வரவழைக்கின்றனர். பொன்னான நேரம் என்பார்களே, அந்தப் பொன்னான நேரத்தில் உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டதால் அந்த போலீஸ் அதிகாரி காப்பாற்றப்படுகிறார்.

அட குற்றம்/விசாரணை எல்லாத்தையும் தள்ளிவிட்டு, மனிதநேயத்துடன் நடந்து கொண்டமைக்காக உடனடியாக அந்த கைதி விடுவிக்கப்படுகிறார். பிறகு அவருக்கு விருது கொடுத்தும் கௌரவித்திருக்கிறது போலீஸ்!

நடந்தது அமெரிக்க மாநிலம் ஃப்ளோரிடாவில் உள்ள ஃபோர்ட் லாடர்டேல் எனும் நகரில்தான்…

போலீஸ் அதிகாரியின் பெயர் ஃப்ராங்க்ளின் ஃபோல்க்ஸ்
அந்தக் கைதியின் பெயர் ருட்லெட்ஜ்

அதானே பார்த்தேன் என்கிறீர்களா? வீடியோவைப் பாருங்கள்

10463006_10152464576066575_8128992156402105534_nRafeeq Friend

வீடியோவைப் பாருங்கள்

 

Advertisements
 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: