RSS

Monthly Archives: February 2015

வயிற்றின் கொழுப்பை குறைக்க வீட்டு சிகிச்சைகள்!!

இந்த பூமியில் வாழும் ஒவ்வொரு நபரும் தங்கள் வயிற்றில் உள்ள கொழுப்பை நீக்க விரும்புவார்கள். வயிற்றில் தேங்கும் கொழுப்பு அசிங்கமான தோற்றத்தை உண்டாக்கும். மேலும் அது உடல்நலத்திற்கும் மிகுந்த ஆபத்தை வரவழைக்கும். உடல் உறுப்புகளில் தேங்கும் கொழுப்பு மற்றும் வயிற்று பகுதியில் தேங்கும் கொழுப்பால் சர்க்கரை நோய், இதய நோய்கள், வாதம் மற்றும் மூளை தோய்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

வயிற்றில் உள்ள கொழுப்பை குறைக்க வேண்டும் என்றால், சரியான உணவுகள் கண்டிப்பாக தேவை. அவைகள் உங்கள் ஈரலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கவும், உங்கள் மெட்டபாலிசம் அளவை ஊக்குவிக்கவும் உதவும். இதனால் உங்கள் வயிற்றில் உள்ள கொழுப்பை நீக்க அது உதவும். கொழுப்புகளை எரிக்க உதவும் உணவுகளும், மசாலாக்களும் பல உள்ளது. இவைகள் உங்கள் வயிற்றில் உள்ள கொழுப்புகளை குறைக்க திறம்பட செயல்படும். இவ்வகை உணவுகள் மற்றும் மசாலாக்களின் உதவியோடு வயிற்றில் உள்ள கொழுப்பை குறைக்க சில திறமையான வீட்டு சிகிச்சைகள் உள்ளது. இதோ, அவை உங்களுக்காக! Read the rest of this entry »

Advertisements
 

உயர்வு தாழ்வு என பணத்தால் மனிதத் தரத்தைப் பிரிப்பது கூடாது

-      329 02-30tfபெருமையோடு உன் முகத்தை மனிதர்களைவிட்டும் திருப்பிக்கொள்ளாதே!

பணத்தைக் குறியாக வைத்து பணமுள்ள மனிதரை இச் சமூகம் மதிப்பதும், பணமில்லாதவரை அலட்சியம் \செய்யும் போக்கு இவ்வுலகெங்கிலும் உள்ளது.

ஏற்றத்தாழ்வு கூடாது என்பதற்காகத்தான் ஓரணியாகத் தொழுகை முறையை வகுத்துத் தந்தான் இறைவன்.

பணமுள்ள ஒருவர் நின்று கொண்டிருந்தால் அவரை உட்கார்ந்து பேசுங்கள் என்று பலரும் அக்கறையோடு உபசரிப்பார்கள். பணமில்லாதவராக இருந்தால் உட்காருங்கள் என்று சொல்ல ஆளிருக்காது.

வெளியில்தான் அப்படியென்றால் இறையில்லமாம் பள்ளிவாசலிலும் மனிதர்களுக்குள் வித்தியாசம் காட்டுகிறார்கள். செல்வந்தரென்று ஒருவர் பள்ளிவாசலுக்குள் தொழும்போது மின்விசிறியை அவசர அவசரமாக ஓடிச்சென்று சில பள்ளிவாசல் உதவியாளர்களே விசிறியைச் சுழல விடுவார்கள். மற்றவர்கள் தொழும்போது இந்த உபசரனையைக் காணமுடியாது. இச்செயல்கள் அனைத்தும் இறைவனுக்குப் பிடிப்பதில்லை.

“உயர்வு தாழ்வு என பணத்தால் மனிதத் தரத்தைக் குறைப்பது பெரும்பாவம்” என்றார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். ”நாளை கியாம நாளில் அதுபற்றி விசாரிக்கப்பட்டு இறைவனால் தண்டிக்கப்படுவர்” என்றார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். Read the rest of this entry »

 

வேண்டும் வேண்டும் வேண்டும் ….!

உடலுழைப்பு தினமும்
வேண்டும்
உழைத்துண்டு வாழ
வேண்டும்

பகிர்ந்துண்டு இன்பம் காண
வேண்டும்
உறுதியான உடலுரம்
வேண்டும்

உண்மையான அன்பு
வேண்டும்
தற்பெருமையில்லா எண்ணம்
வேண்டும்

சோர்வில்லா செயலாற்றல்
வேண்டும்
உரிமையான உறவுகள்
வேண்டும் Read the rest of this entry »

 

மக்கள் நலனுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து செயல்படுகிறார் திரு. தாரேஸ் அகமது

10991343_826025437468820_3412730517994130593_n#‎Realhero‬ மக்கள் நலனுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து செயல்படுகிறார் திரு. தாரேஸ் அகமது பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் , இன்று பால்பண்ணை தொழில் செய்யும் விவசாயிகளை அழைத்து குறைதீர்ப்பு கூட்டத்தில் அவர் உரையாற்றினார் அப்போது அவர் தன்னை ஆட்சியராக கருதாமல் சக மக்களாக பகிர்ந்துகொண்டார் அப்போது தேவையான வசதிகளை கேட்டு பெற தனது அலைபேசி எண் கொடுத்து அழைக்குமாறும் தான் எடுக்கமுடியாத பட்சத்தில் குறுந்தகவல் அனுப்புமாறும் கேட்டுக்கொண்டார் ,,,, மேலும் துறை அதிகாரிகளிடம் மக்கள் முன்பே குறைகளை நிறைவேற்றவும் ஆணை பிறப்பித்தார் அதிகாரிகளின் அலட்சியங்களை அப்போதே கண்டித்தார் பால்மாடு வளர்ப்பு தொழிலுக்கு வங்கி கடன் தரவேண்டும் எனவும் உத்தரவிட்டார் , மேலும் கொள்முதல் செய்யும் பால் பண்ணைகளில் ஏதேனும் குறைகள் இருப்பினும் பணப்பட்டுவாடாவில் தாமதம் அளவுகள் குறைப்பு சலுகைகள் வழங்க மறுப்பு டாக்டர்கள் கவனிப்பு குறைவு மானியம் தவிர்த்தல் போன்ற பலவாறு குறைகளை உடனுக்குடன் அறிவிக்கும்படி கேட்டுக்கொண்டார் யாருக்கேனும் பயம் இருப்பினும் அலைபேசியில் அழைத்து குறைகளை கூறுமாறு கேட்டுக்கொண்டார் ,,, எந்தவொரு துறையில் தங்களுக்கு ஏதேனும் குறை இருந்தால் உடனடியாக ஆட்சியர் அலுவலகம் சென்று புகாரினை எழுத்து மூலமாக பதிவு செய்வதோடு அதற்கான ரசீது பெறுமாறு வலியுறுத்தி கூறினார் ,, பெரம்பலூர் மக்களுக்கு இவர் ஒரு பெரிய வரம் ! அவர் செயல் என்னை மிகவும் ஆச்சரியப்பட வைத்தது !

10953285_820366271368070_1875364047615734886_nSathiyananthan Subramaniyan Banumathi
 

மருமகனும் மருமகளும் பிள்ளைகளே !

மெளலவி நூ. அப்துல் ஹாதி பாகவி எம்.ஏ.,எம்ஃபில்,

ஓர் ஆண் திருமணம் செய்து கொண்டால் அவனுடைய மனைவியின் பெற்றோருக்கு மற்றொரு மகனாக ஆகிவிடுகின்றான். அதனால்தான் அவனுக்கு அவனுடைய மனைவியின் தாய்-மாமியார் திரையிட வேண்டிய அவசியமில்லை. அதேபோல் திருமணத்திற்குப் பின் ஒரு பெண் தன் கணவரின் பெற்றோருக்கு மற்றொரு மகளாக ஆகிவிடுகின்றாள். அதனாலேயே அவள் தன் கணவனின் தந்தைக்கு முன் திரையிட வேண்டிய அவசியமில்லை என்று இஸ்லாம் கூறுகிறது.

ஆக திருமணத்திற்குப்பின் பெண்வீட்டாருக்கு ஒரு மகனும் ஆண் வீட்டாருக்கு ஒரு மகளும் கிடைக்கின்றனர். இது இயல்பாக இறைவன் ஏற்படுத்திய உறவு. இந்த உறவை இருவீட்டாரின் பெற்றோரும் எந்த அளவுக்குப் பாதுகாக்கிறனர். அல்லது எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்பதே இன்று நம்முன் நிற்கும் வினா. Read the rest of this entry »

 

கொட்டம் அடக்கினரே….!

வன்மம் வளர்த்து
அசத்தியத்தில் ஆழ்ந்து
பகட்டுகள் பரப்பி
ஆன்மீகப் போதனையை அவிழ்த்துவிட்டான்

அக்கிரமம் பேசி
அனைவரையும் ஏமாற்றி
பசுத்தோல் போர்த்தி
பண்பட்டோரை ஆண்டுவிட ஆசைப்பட்டான்

அறிவால் மேதையென்று
அவனியில் இல்லையாருமென
வாய்ப்பந்தல் போட்டுவிட்டு
அகந்தைகொண்டு ஆட்டுவிக்க கருதிக்கூட்டினான் Read the rest of this entry »

 

ஏழை பட்டதாரிகளுக்கு முற்றிலும் இலவசக் கணினிப் பயிற்சிகள்!

சென்னை வேளச்சேரி பயிலகம் ஏழை பட்டதாரிகளுக்கு முற்றிலும் (எந்த மறைமுகக் கட்டணமும் இல்லாமல்) இலவசக் கணினிப் பயிற்சி வகுப்புகளைத் தொடங்கவுள்ளது.

ஜாவா, டாட் நெட், ஆரக்கிள், வெப் டிசைனிங், சாப்ட்வேர் டெஸ்டிங் ஆகிய 24க்கும் அதிகமான பயிற்சிகள் பயிலகத்தில் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. இப்பயிற்சிகளைப் பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பல்லாண்டுகள் அனுபவம் பெற்ற பயிற்சியாளர்கள் வழங்கி வருகிறார்கள். வரும் ஆண்டு முதல் ஏழை பட்டதாரிகளும் பெற்று பயன் பெறும் வகையில் முற்றிலும் இலவசமாக இப்பயிற்சிகளைக் கொடுக்கப் பயிலகம் பயிற்சி நிறுவனம் முன்வந்துள்ளது.

இப்பயிற்சிகளுக்கு அனுமதிக் கட்டணம், பதிவுக் கட்டணம் என்பன போன்ற எந்த மறைமுகக் கட்டணங்களும் கிடையாது.

தகுதி:

பயிற்சிகளில் இணைந்து பயன் பெறும் மாணவர் ஏதாவது ஒரு துறையில் பட்டப் படிப்பு / பட்டயப்படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும். ஏழ்மை நிலையில் இருப்பவராக இருக்க வேண்டும். இவற்றைத் தவிர வேறெந்த நிபந்தனைகளும் இல்லை.

பதிவு:

இப்பயிற்சிகளுக்கு முன்பதிவை http://payilagam.com/free-software-training-courses-in-chennai என்னும் இணையத்தளத்தில் செய்யலாம். அல்லது 8883775533 என்னும் எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

பயிற்சி மைய முகவரி:

பயிலகம்,

67/4 இ, விஜய நகர் 3ஆவது குறுக்குத் தெரு,

வேளச்சேரி, சென்னை 600042

நன்றி  கணியன்.காம்

 

Tags: