RSS

வயிற்றின் கொழுப்பை குறைக்க வீட்டு சிகிச்சைகள்!!

22 Feb

இந்த பூமியில் வாழும் ஒவ்வொரு நபரும் தங்கள் வயிற்றில் உள்ள கொழுப்பை நீக்க விரும்புவார்கள். வயிற்றில் தேங்கும் கொழுப்பு அசிங்கமான தோற்றத்தை உண்டாக்கும். மேலும் அது உடல்நலத்திற்கும் மிகுந்த ஆபத்தை வரவழைக்கும். உடல் உறுப்புகளில் தேங்கும் கொழுப்பு மற்றும் வயிற்று பகுதியில் தேங்கும் கொழுப்பால் சர்க்கரை நோய், இதய நோய்கள், வாதம் மற்றும் மூளை தோய்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

வயிற்றில் உள்ள கொழுப்பை குறைக்க வேண்டும் என்றால், சரியான உணவுகள் கண்டிப்பாக தேவை. அவைகள் உங்கள் ஈரலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கவும், உங்கள் மெட்டபாலிசம் அளவை ஊக்குவிக்கவும் உதவும். இதனால் உங்கள் வயிற்றில் உள்ள கொழுப்பை நீக்க அது உதவும். கொழுப்புகளை எரிக்க உதவும் உணவுகளும், மசாலாக்களும் பல உள்ளது. இவைகள் உங்கள் வயிற்றில் உள்ள கொழுப்புகளை குறைக்க திறம்பட செயல்படும். இவ்வகை உணவுகள் மற்றும் மசாலாக்களின் உதவியோடு வயிற்றில் உள்ள கொழுப்பை குறைக்க சில திறமையான வீட்டு சிகிச்சைகள் உள்ளது. இதோ, அவை உங்களுக்காக!

எலுமிச்சை ஜூஸ்

காலையில் எழுந்தவுடன் எலுமிச்சை பழம் ஒன்றை எடுத்து சாறு பிழிந்து அதை தண்ணீரில் கலக்கவும். கொழுப்பை எரிக்கும் நோக்கத்திற்காக, எலுமிச்சை ஜூஸை தயாரிக்கும் போது வெதுவெதுப்பான நீரை பயன்படுத்துவது நல்லதென்றாலும் கூட, அறை வெப்பநிலையில் உள்ள நீரையும் பயன்படுத்தலாம். இது எலுமிச்சையை அதன் வேலையை செய்ய விடாமல் தடுக்க போவதில்லை. எலுமிச்சை ஜூஸை நன்றாக கலந்து தினமும் காலை வெறும் வயிற்றில் பருக வேண்டும். தினமும் காலை இதனை பருகிய பிறகு, 30 நிமிடங்களுக்கு வரை எதையும் உண்ணவோ, பருகவோ கூடாது.

கிரான்பெர்ரி ஜூஸ்

காலையில் கிரான்பெர்ரி ஜூஸ் உடன் தண்ணீர் கலந்து உங்கள் கிரான்பெர்ரி ஜூஸை தயார் செய்து கொள்ளுங்கள். அன்றைய நாள் முழுவதும் இந்த கிரான் நீரை கொஞ்சம் கொஞ்சமாக பருகுங்கள். காலை மற்றும் மதிய உணவிற்கு முன்னும், இரவு உணவிற்கு பின்னும், மற்ற நேரங்களிலும் இதனை ஒரு கப் பருகுங்கள். பருகுவதற்கு முன்னும் கூட இதை தயார் செய்து குடிக்கலாம். 2 டீஸ்பூன் கிரான்பெர்ரி ஜூஸை ஒரு கப்பிற்கு சற்று குறைவான தண்ணீருடன் கலந்து குடிக்கலாம்.

மீன் எண்ணெய்

மீனில் ஒமேகா 3 கொழுப்பமிலங்கள் அடங்கியுள்ளது. ஐகோசாபென்டேயினாய்க் அமிலம், டொக்கோஸாஹெக்ஸாயனிக் அமிலம் மற்றும் லினோலெனிக் அமிலம் போன்ற ஒமேகா 3 அமிலங்கள் கொழுப்புகளை உடைத்து, வயிற்று பகுதியை சுற்றியுள்ள கொழுப்பு தேக்கத்தை குறைக்க உதவும். உங்களால் மீன் எண்ணெய்யை பயன்படுத்த முடியவில்லை என்றால், ஒமேகா 3 கொழுப்பமிலங்கள் வளமையாக உள்ள மீனை உண்ணுங்கள். இதை செய்திடுக: தினமும் 6 கிராம் மீன் எண்ணெய்யை பயன்படுத்துங்கள். 6 கிராம் என்பது நிரம்பி வழியும் ஒரு டீஸ்பூன் அளவை கொண்டதாகும். இதற்கு மாற்றாக, சால்மன் அல்லது கானாங்கெளுத்தி மீனை வாரம் இரு முறை உண்ணலாம். டூனா மற்றும் ஹாலிபட் போன்ற மீன்களிலும் ஒமேகா 3 அதிகமாக உள்ளது.

சியா விதைகள்

நீங்கள் சைவ உணவை மட்டும் உண்ணக்கூடியவராக இருந்தால் மீன் இல்லாமல் எப்படி ஒமேகா-3 கொழுப்பமிலங்களைப் பெறுவது என தெரியவில்லையா? கவலை வேண்டாம், மீனில் உள்ளதை போலவே ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் அதிக அளவில் உள்ள சியா விதைகளைப் பயன்படுத்தலாம். இருப்பினும் இந்த விதைகளில் உள்ள ஆல்ஃபா-லினோலெனிக் அமிலத்தை DHA அல்லது EPA-வாக மாற்ற (மீன் எண்ணெயில் இது நேரடியாக கிட்டி விடும்) உங்கள் உடல் சற்று அதிகமாக பாடுபட வேண்டும். ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் போக, சியா விதைகளில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள், கால்சியம், இரும்பு மற்றும் டையட்டரி நார்ச்சத்தும் அதிகமாக உள்ளது. இவைகள் உங்கள் வயிற்றை நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்திருக்கும். 4-8 டீஸ்பூன் (30-60 கிராம்) சியா விதைகளை பகல் நேரத்தில் உட்கொண்டால், அதிகமாக பசி எடுக்காமல் இருக்கும் என ‘தி ஆஸ்டெக் டையட்’ என்ற புத்தகம் பரிந்துரைக்கிறது. இதனால் அதிகமாக உண்ணாமல் இருக்கலாம். இருப்பினும் 1 டீஸ்பூன் சியா விதைகளை உங்கள் உணவுடன் சேர்த்துக் கொண்டாலே போதுமானது தான்.

இஞ்சி டீ

இஞ்சி என்பது இயற்கையாகவே செரிமானத்திற்கு உதவி செய்யும் பொருள் என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் இஞ்சி என்பது வெப்ப ஆக்கம் என்பது உங்களுக்கு தெரியுமா? வெப்ப ஆக்கம் ஏஜென்ட்கள் உங்கள் உடலின் வெப்பநிலையை அதிகரித்து கொழுப்பை சிறந்த முறையில் எரிக்க உதவிடும். அதிகமாக உண்ணுதல், வயது சம்பந்தப்பட்ட ஹார்மோன் குறைபாடு, உடற்பயிற்சி செய்யாதது மற்றும் மன அழுத்தம் போன்ற சில பிரச்சனைகளால் தான் வயிற்றில் கொழுப்பு தேங்குகிறது. இந்த பிரச்சனைகள் அனைத்தையும் இஞ்சி நீக்கும். கார்டிசோல் உற்பத்தியை தடுத்து நிறுத்தவும் இஞ்சி பயன்படுகிறது. கார்டிசோல் என்பது ஆற்றல் திறனை சீராக்கவும் அணிதிரட்டவும் தேவைப்படும் ஒரு ஸ்டெராய்டு ஹார்மோனாகும். அதனால் வயிற்றில் உள்ள கொழுப்பை குறைக்கும் உங்கள் முயற்சிக்கு இஞ்சி டீயை பருகுங்கள்.

பூண்டு

சுருக்கியக்க (சிஸ்டாலிக்) மற்றும் இதய விரிவு (டையஸ்டாலிக்) இரத்த கொதிப்பை குறைக்கவும், ட்ரைகிளிசரைடுகளை குறைக்கவும், நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கவும் பூண்டு உதவுவதால், அது நம் இதயகுழலிய அமைப்பிற்கு நல்லது என நமக்கு தெரிந்திருக்கும். இதனோடு சேர்த்து, பூண்டில் உடல் பருமன் எதிர்ப்பி குணங்களும் அடங்கியுள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? அதனால் பூண்டை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லதாகும். இருப்பினும் வயிற்றில் உள்ள கொழுப்பை நீக்க பூண்டை பச்சையாக பயன்படுத்துவது தான் அதிக பயனை தரும்.

மூலிகைகள்

மூலிகைகள் என்று தெரியாமலேயே உங்கள் சமையலறையில் பல மூலிகைகள் இருக்கும். அதனை உங்கள் தினசரி சமையலில் அல்லது சாலட் தயாரிப்பு போன்றவற்றில் பயன்படுத்தி தான் வருகிறோம். ஆனால் நம் உடலின் கொழுப்பின் மீது அது தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதும் நமக்கு தெரிவதில்லை. இஞ்சி, புதினா மற்றும் வெள்ளரிக்காய் போன்றவைகள் எல்லாம் அதற்கு சில உதாரணங்கள் ஆகும். இந்த மூலிகைகளை கொழுப்பை எரிக்க உதவும் எலுமிச்சையுடன் சேர்த்து உட்கொண்டால், அது உங்கள் வயிற்றில் உள்ள கொழுப்பை குறைக்கும் மாயத்தை நிகழ்த்தும். அதற்கு தண்ணீருடன் சிறிது வெள்ளரிக்காய், இஞ்சி, எலுமிச்சை சாறு மற்றும் புதினா இலைகள் சேர்த்து இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனைப் பருக வேண்டும்.

லவங்கப்பட்டை

லவங்கப்பட்டையின் இனிப்பு சுவையை தவறாக எண்ணி விடாதீர்கள். அது உங்கள் கொழுப்பை அதிகரிக்காது. சொல்லப்போனால் வயிற்று பகுதியில் உள்ள கொழுப்பையும் சேர்த்து, உடலில் உள்ள ஒட்டுமொத்த கொழுப்பை குறைக்கவும் லவங்கப்பட்டை உதவுகிறது. லவங்கப்பட்டை என்பதும் ஒரு வெப்ப ஆக்கமாகும் (தெர்மோஜீனிக்). அதாவது மெட்டபாலிக் தூண்டல் மூலமாக வெப்பத்தை உருவாக்கும் லவங்கப்பட்டை. இதனால் உங்கள் கொழுப்பை எரிக்க லவங்கப்பட்டையை பயன்படுத்தலாம். உங்கள் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உங்கள் தினசரி உணவில் 1 டீஸ்பூன் லவங்கப்பட்டையை சேர்த்துக் கொள்ளுங்கள்.

கொழுப்பற்ற இறைச்சி

வெப்ப ஆக்க (தெர்மோஜீனிக்) குணங்களை கொண்டுள்ள உணவுகளை உட்கொண்டால், உங்கள் கலோரிகளை எரிக்க அது உதவிடும். புரதத்தில் வெப்ப ஆக்க குணம் அதிகமாக இருக்கிறது. அதனால் கலோரிகளை எரிக்க உதவும் சிறந்த உணவாக விளங்குகிறது கொழுப்பில்லா இறைச்சி. கொழுப்பில்லா இறைச்சியை உண்ணும் போது, அது செரிமானமாகும் போதே, அதிலுள்ள கலோரிகளில் 30 சதவீதத்தை அது எரித்துவிடும். அதனால் நீங்கள் 300 கலோரிகள் கொண்ட கோழி நெஞ்சை உண்ணும் போது, அதை செரிக்க வைக்க 90 கலோரிகளை பயன்படுத்துகின்றனர். உங்கள் ஒவ்வொரு வேளை உணவோடும் கொஞ்சம் புரதத்தை சேர்த்துக் கொள்வது நல்லதாகும். அது கொழுப்பில்லா கோழி, மாட்டிறைச்சியாக இருக்கலாம். இவைகளை குறிப்பாக உங்கள் இரவு உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அப்போது தான் உங்கள் உடலின் மெட்டபாலிசம் குறைவாக இருக்கும் நேரத்தில் செரிமானம் மூலம் உட்கொண்ட கலோரிகளை எரிக்கலாம். கொழுப்பில்லா இறைச்சியை வறுக்கவோ பொரிக்கவோ வேண்டாம்.

கிரீன் டீ

தினமும் 4 கப் கிரீன் டீ குடித்தவர்களுக்கு, 8 வார கால கட்டத்தில் 6 பவுண்ட் அளவிலான எடை குறைந்தது என்று “தி அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் க்ளினிகல் ந்யூட்ரிஷன்” கூறியுள்ளது. கிரீன் டீயில் எபிகாலோகேட்சின்-3-காலேட் (EGCG) என அழைக்கப்படும் கேட்சின் வகை ஒன்று உள்ளது. பல வித சிகிச்சை முறைகளை கொண்டுள்ள இயற்கையான ஃபெனால் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்டாக இது விளங்குகிறது. கிரீன் டீ குடிக்கும் போது, அதிலுள்ள ECGC உங்கள் மெட்டபாலிசத்தை ஊக்குவித்திடும். தினமும் 3-4 கப் கிரீன் டீ குடியுங்கள். ஒவ்வொரு முறையும் அதனை நற்பதத்துடன் தயாரித்து கொள்ளுங்கள். குளிர்ந்த கிரீன் டீ வேண்டுமானால் அதனை குளிர் சாதன பெட்டியில் வைத்து குடித்திடவும்.

வாழ்க்கை முறை மாற்றங்கள்

சில நேரங்களில் வயிற்றின் கொழுப்பை நீக்குவதற்கு நீங்கள் போதிய உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, இயற்கை சிகிச்சைகளை கையாளுவீர்கள். ஆனாலும் உங்களால் கொழுப்பை குறைக்க முடிவதில்லை. அப்படியானால் உங்களின் வாழ்க்கை முறையை நீங்கள் ஆராய்ந்து, அதில் சில மாற்றங்களை நீங்கள் செய்தாக வேண்டும். இந்த மாற்றங்கள் சிறியது தான் என்றாலும் கூட, அதனை ஒரு பழக்கமாக நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். உங்கள் வயிற்றின் கொழுப்பை நீங்கள் உண்மையிலேயே நீக்க வேண்டுமானால், இப்போதிலிருந்தே இந்த மாற்றங்களை கொண்டு வாருங்கள்.

போதிய தூக்கம்

வயிற்றில் கொழுப்பு தேங்குவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக விளங்குவது தூக்கமின்மை. நீங்கள் தூங்காமல் இருக்கும் போது, இனிப்பு மற்றும் கொழுப்பு உணவுகளை உட்கொள்ள நீங்கள் தூண்டப்படுவீர்கள். உங்கள் கார்டிசோல் ஹார்மோனையும் இது அதிகரிக்கச் செய்யும். இதனால் இன்சுலினுக்கு நீங்கள் உணர்சியற்றவராக மாறி விடுவீர்கள். இதன் காரணமாக உங்கள் உடலின் பயோ-ரிதமை நீங்கள் இழப்பீர்கள். அதனால் நன்றாக தூங்குங்கள்.

மதுபானம் குடிப்பதை நிறுத்தவும்

மதுபானம் முழுவதும் கலோரிகளால் நிறைந்துள்ளது. ஆனாலும் அதனை பருகும் போது வயிறு நிறைவதில்லை. அளவுக்கு அதிகமாக அதனை பருகும் போது உங்கள் வயிற்றை சுற்றி கொழுப்பு தேங்கிவிடும். அதனால் மதுபானம் பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது.


முதுவை ஹிதாயத்
http://www.mudukulathur.com
muduvaihidayath@gmail.com
00971 50 51 96 433

Advertisements
 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: