RSS

Monthly Archives: April 2015

பள்ளி விடுமுறையை எப்படி கழிப்பது ? அதிரை மெய்சா தரும் டிப்ஸ் !

gal2_1929244g

தொடக்கப் பள்ளி முதல் மேல்நிலை பள்ளிவரை முழுஆண்டு தேர்வு முடிந்து மாணவ மாணவியர்கள் பெருமூச்சுவிட்டபடியிருக்கும் இவ்வேளையில் மிக மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். காரணம் வருஷம் முழுக்க நேரத்திற்கு எழுந்து பள்ளிக்கூடம் செல்ல ஆயத்தமாவதும் ,வீட்டுப் பாடம் படிப்பதும் தேர்வுக்குப் படிப்பதும் டியூசனுக்கு போவதும் இப்படி பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தவர்களுக்கு நீண்ட விடுப்பு என்றால் சும்மாவா… ஹல்வா சாப்பிடுவதுபோல் ஆனந்தமாக சந்தோசமாக இருக்கத்தானே செய்யும். வருஷம் முழுக்க வகுப்பாசிரியர்களையும், சக மாணாக்களையும் பார்த்த கண்களுக்கு சற்று மாற்றம் இருக்கத்தானே வேண்டும். அதில் தப்பொன்றுமில்லை. Read the rest of this entry »

 
 

கடிதம் எழுதிட ஆசை

கடிதம் எழுதிட ஆசை
ராபியா குமாரன்

உயிரிருக்கும் வரை
நினைவிலிருக்கும்
என் பள்ளிப்பருவது…

தொலைதூரம் சென்ற
உறவுகள் கடிதங்களால்
உறவாடிய காலமது…

வேலை வேண்டி,
கடல் தாண்டி,
துபாயில் வசித்த
தாய்மாமாவிடமிருந்து
தவறாமல் கடிதங்கள்
வந்த நேரமது…
Read the rest of this entry »

 
 

அருமை தெரியும் ….!

வெயிலின் அருமை
நிழலில் தெரியும்
பசியின் அருமை
ருசியில் தெரியும்

பணத்தின் அருமை
செலவில் தெரியும்
ஈகையின் அருமை
கொடுப்பதில் தெரியும் Read the rest of this entry »

 
 

சிலரது வாழ்த்துகள் உண்மையில் திரும்பிப் பார்க்கவே செய்கின்றன..

அஸ்ஸலாமு அலைக்கும்…

11008079_976694145698038_2779724592277086953_nசிலரது வாழ்த்துகள் உண்மையில் எங்களை திரும்பிப் பார்க்கவே செய்கின்றன; அப்படியான ஒரு வாழ்த்தை சகோதரி இலங்கையைச் சேர்ந்த லறீனா அப்துல் ஹக் அவர்களிடமிருந்து பெறப்பட்டவை. கவிதை, இலக்கியம் பற்றி ஒரளவு தெரிந்தவர்கள் இந்த சகோதரியையும் தெரிந்தே வைத்திருப்பார்கள். அப்படியான ஒரு ஆளுமை. அவர்களின் வரிகள்…

***************************************************************************** Read the rest of this entry »

 
1 Comment

Posted by on April 21, 2015 in Uncategorized

 

அதெல்லாம் அவாளுக்காக ரிசர்வ் செய்யப்பட்டவைகள்!/தாஜ்

11130244_841539859249092_6185250968194359069_n‘இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தை
இந்து மக்களே கைகொள்ள வேண்டும்’ என்பதுதான்…
இந்துத்துவாவின் அடிப்படையான கருத்து!

அதன்படிக்கு நேர் நோக்கிப் பார்த்தால்…
இந்தியாவில்…
எல்லா அரசியல் கட்சிகளுமே
இந்து மக்களால் ஆனதே!
நேற்றைக்கும் இன்றைக்கும்
அவர்களே அதன் தலைவர்கள்…
அவர்களே நாட்டையும் ஆளுகிறார்கள்!

பின் ஏன்…
‘இந்துக்களுக்காக’ என்கிற அடையாளத்தில்
நாட்டில் கட்சி வேண்டியிருக்கிறது…? Read the rest of this entry »

 
 

எழுங்கள்! போராடுங்கள்! முயலுங்கள்!

-திருச்சி A.முஹம்மது அபூதாஹிர்

தோஹா – கத்தார் thahiruae@gmail.com Mob .974 + 66928662

வாழ்க்கை என்பது கவிதைகளில் வசந்தக் காலமாக வர்ணிக்கப் படுகிறது. திரைகளில் பூத்துக் குலுங்கும் தோட்டமாக காட்டப்படுகிறது.கற்பனை உலகிலோ எப்பொழுதும் இருள் கவ்வாத ஒளிமயமிக்க பவுர்ணமி இரவுகளாகவே காட்டப் படுகிறது. சுகமான வாழ்க்கையின் எதிர்ப் பக்கத்தையும் மனிதன் நோக்கித்தான் ஆக வேண்டும். வசந்த் காலத்தை மட்டுமல்ல சுட்டெரிக்கும் கோடை காலத்தையும் அவன் கடந்துதான் ஆக வேண்டும்.தோட்டங்களில் மட்டுமல்ல கால்களின் பாதங்களை கிழிக்கும் கரடு முரடான கற்கள் மற்றும் முட்கள் மீதும் அவன் நடந்தே ஆக வேண்டும். ஒளி வெள்ளத்தில் எந்த சிரமமும் இன்றி போவது மட்டுமல்ல பாதையின் அடுத்தப் பகுதியில் இருள் சூழ்ந்த பள்ளத்திலும் அவன் போய்த்தான் தீர வேண்டும்.அப்போதுதான் வாழ்வின் இலக்கை மனிதன் அடைய முடியும்.

அல்லாஹ்வின் மீது முழுமையான நம்பிக்கை, தன்னம்பிக்கை, விடா முயற்சி, பொறுமை, சகிப்புத்தன்மை ஆகியன மனிதனின் வாழ்வை வளப் படுத்தும்.அவனின் எதிர் காலத்தை பலப் படுத்தும்.

அருள் மறை குர்ஆன் அழகுபட உரைக்கிறது

“நீங்கள் (உண்மையான) விசுவாசிகளாக இருந்தால், (உங்கள் காரியங்களை ஒப்படைத்து முழுமையாக) அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வையுங்கள்” (குர் ஆன் 5:23)

“நீங்கள் மனந்தளர்ந்து விடாதீர்கள்; கவலையும் கொள்ளாதீர்கள். நீங்கள் இறைநம்பிக்கையுடையோராயின், நீங்களே மேலோங்குவீர்கள்”. (குர்ஆன் 3:139)

“நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது”. (குர்ஆன் 94:6 )

“நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (குர்ஆன் (2 :155)

(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள். (குர்ஆன் 2:156)

“மேலும், மனிதனுக்குதான் முயற்சி செய்ததைத் தவிர வேறு எதுவும் இல்லை!” (குர்ஆன் 39: 53) Read the rest of this entry »

 
 

அப்படி தெளிவா சொல்லணும்தானே !

கவனமாய் சொன்னது
கருத்துப் பிழையாயிற்று
நல்ல காலம்
இனி நல்லது செய்வோம்
சொர்க்கம் சேர்வோம் என்றதில்
எண்ணிப் பார்க்கப் படாமலேயே
குத்து மதிப்பில்
தலைகள் தப்பியது
தம்புரான் புண்ணியத்தில் !

குற்றம் பிடிப்பின்
எல்லாமும்தான்…
நிழல் கூட
பாவமென்றாகிறது
மையத்தான் கொல்லை
மரித்தவர்களுக்கான
கருவேல நிழல்
மர்ஹூம்களுக்கானதில்
மௌலாக்களுக்குமா
அறிவுப் பிழை என்றாகிறதே
உணவில்
தூக்கி எறியத்தான் என்றாலும்
உறையில்
அக்மார்க் சான்றிருப்பதால்
ஆகாத வெயிலென்பதால்
கறிவேப்பிலையை
கட்டாயம் வளர்க்கணும்
இனி நிழல் கூட
அறிவுடன் வேண்டும்தான் ! Read the rest of this entry »