RSS

அப்படி தெளிவா சொல்லணும்தானே !

13 Apr

கவனமாய் சொன்னது
கருத்துப் பிழையாயிற்று
நல்ல காலம்
இனி நல்லது செய்வோம்
சொர்க்கம் சேர்வோம் என்றதில்
எண்ணிப் பார்க்கப் படாமலேயே
குத்து மதிப்பில்
தலைகள் தப்பியது
தம்புரான் புண்ணியத்தில் !

குற்றம் பிடிப்பின்
எல்லாமும்தான்…
நிழல் கூட
பாவமென்றாகிறது
மையத்தான் கொல்லை
மரித்தவர்களுக்கான
கருவேல நிழல்
மர்ஹூம்களுக்கானதில்
மௌலாக்களுக்குமா
அறிவுப் பிழை என்றாகிறதே
உணவில்
தூக்கி எறியத்தான் என்றாலும்
உறையில்
அக்மார்க் சான்றிருப்பதால்
ஆகாத வெயிலென்பதால்
கறிவேப்பிலையை
கட்டாயம் வளர்க்கணும்
இனி நிழல் கூட
அறிவுடன் வேண்டும்தான் !

மிகுத்தோரைச் சொன்னதில்
தானில்லை என்றதினால்
கருத்தே சிதைவானது
தனித்தோனை…..?
ஒப்பாருமிலா ஒருவன்
ஒருவனே தானப்பா
இப்படியெலாம் என்னப்பா இது
எப்படியப்பா சொல்லிய சொல்லில்
என்னப்பா அப்படி ஒரு தப்பப்பா
ஏனப்பா நீ
இதுவெல்லாம் ஒரு தப்பாப்பா
கேட்டது இப்படி என்றால்…..
எப்படியோ பார்த்து
கொஞ்சம் கூடமாட
(எழுத்தை)
போட்டு தாங்கண்ணே
என்கிற ரீதியில்
பேரம் படிவது போல் நகர்கிறது !.

இனி….
எது சொல்ல வரினும்
இன்னார் மகன் இன்னாரென்றும்
இது சொல்லில்
அவர் தவிர்த்தென்றும்
அப்படி தெளிவாய் சொல்ல
தெளிவான பயிற்ச்சி
எடுக்கத்தான் வேண்டும்
ஸ்..ஸ்..ஸ்..ஷெப்பா….
சூட்டைச் சொன்னேன்
குத்தம் சொல்ற
நாங்களென்றால் சும்மாவா
சும்மா அதிருதுல்லே…. !!.

கண்ணில் படுகிற புள்ளிகளை வைத்தே நான் கோலம் வரைகிறேன் !

10813_488830407926340_2010597110637474255_nRaheemullah Mohamed Vavar
Advertisements
 
 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: