RSS

சிலரது வாழ்த்துகள் உண்மையில் திரும்பிப் பார்க்கவே செய்கின்றன..

21 Apr

அஸ்ஸலாமு அலைக்கும்…

11008079_976694145698038_2779724592277086953_nசிலரது வாழ்த்துகள் உண்மையில் எங்களை திரும்பிப் பார்க்கவே செய்கின்றன; அப்படியான ஒரு வாழ்த்தை சகோதரி இலங்கையைச் சேர்ந்த லறீனா அப்துல் ஹக் அவர்களிடமிருந்து பெறப்பட்டவை. கவிதை, இலக்கியம் பற்றி ஒரளவு தெரிந்தவர்கள் இந்த சகோதரியையும் தெரிந்தே வைத்திருப்பார்கள். அப்படியான ஒரு ஆளுமை. அவர்களின் வரிகள்…

*****************************************************************************
||தமிழ் முஸ்லிம் சகோதரர்கள் குழுமத்தில் இருந்தபோதே உங்கள் கவிதைகளின் வாசகி நான். ஒருமுறை வெளிநாட்டு வாழ்க்கை பற்றிய ஒரு கவிதையை சகோதரர் ஒருவர் பகிர்ந்து இருந்தார். அதன் வரிகளைப் பார்த்ததுமே, ‘இது நம்ம யாஸிர் அரஃபாத் சகோவின் கவிதையாச்சே!’ என்று மனதுக்குள் மின்னல் வெட்டியது.

உடனே அவரிடம் பின்னூட்டம் இட்டுக் கேட்டேன், ‘இது இன்னார் எழுதிய கவிதை அல்லவா?’ என்று. அவர் சொன்னார், “எனக்குத் தெரியாது, இணையத்தில் கண்டேன், மனதைத் தொட்டது, எனவே பகிர்ந்தேன்” என்று. (சரி, “யாரோ” என்றாவது கீழே எழுதலாம் தானே? அந்த நடைமுறை எல்லாம் நம்மில் அனேகருக்கு பழக்கத்திலேயே இல்லை). அதன் பிறகுதான் முகநூலில் உங்கள் பெயரும் தென்படுகிறதா என்று தேடினேன்.
தனக்கென்று தனித்துவமான ஒரு நடை உங்களிடம் உள்ளது. எடுக்கும் கருப்பொருளை உணர்வில் தோய்த்து நீங்கள் எழுதும் விதம் மிகவும் நேர்த்தியானது. குறிப்பாக, வெளிநாட்டு வாழ்வின் அவலங்கள் பற்றிய உங்கள் கவிதைகளை, எழுதியவர் பேர் இல்லாமல் வாசித்தால்கூட, உங்களுடைய வரிகள் என்று மிக இலகுவாகக் கண்டுபிடித்துவிடக் கூடியவை. அந்தளவு ஆழமாக அவ்வரிகள் மனதில் பதிந்து, தாக்கம் செலுத்தி உள்ளன.

ஆகவே, சகோ. இது அல்லாஹ் உங்களுக்கு அளித்த வரம். அதனை சிறப்பாகப் பயன்படுத்தியபடி நீங்கள் முன்னோக்கிச் செல்வதில் இடர்ப்பாடுகளைப் புறந்தள்ளி வீறுநடைபோடும் வினைத் திறனை அல்லாஹ் அருள்வானாக!
உங்கள் எழுத்து அவ்வளவு இலகுவில் மறக்கக்கூடிய எழுத்தல்ல சகோ. மப்ரூக்! மாஷா அல்லாஹ்! பாரகல்லாஹ்!

-சகோதரி லறீனா அப்துல் ஹக் (இலங்கை)

***********************************************************************************
இன்னொருவரின் வாழ்த்தையும் அறிவுரையையும் சொல்லாமல் என்னால் இந்த பதிவை முடிக்க முடியாது. அவர்கள்தான் தாஜ் அண்ணன் 984311_976694215698031_6544666882061760448_n

அவர்கள். கதை, கவிதை, இலக்கியமென எல்லாவற்றிலும் காலூன்றியவர்கள். மிக எளிமையான தோற்றத்திலும், இப்படியான ஒரு ஆளுமை எப்படி சர்வ சாதாரணமாக ”அ” எழுதும் மாணவரிடம் எப்படி கனிவாக பேசுகிறார் என்றே ஆச்சர்யம் கொடுக்கும் அளவிற்கு மிக்கதொரு ஆளுமை இவர்கள்.

அப்படியான அவர்கள் அளித்த வாழ்த்துகளும், அறிவுரைகளும் கொண்ட அவரின் வரிகள்…

***********************************************************************************
‘எதிர் கவிதை’ Yasar Arafat – க்கு நன்றாகவே வருகிறது. என்றாலும் குறைத்து கொள்ளுங்கள்… கற்ற அழகு கவிதையின் போக்கே மாறிவிடும்….
**************************************************************************************

நிறைய முறை திரும்ப திரும்ப படித்துப்பார்த்திருக்கிறேன் இந்த வரிகளை, என்னுடைய எழுத்துகளுக்கு சிறந்த ஒரு தங்கமான கடிவாளமாக கருதுகிறேன். அண்ணனின் அறிவுரைகளை இன்ஷா அல்லாஹ் செயல்படுத்த பெரிதும் முயற்சி செய்கிறேன்.

இந்த எளியவனுக்கு வாழ்த்து சொன்ன ஆளுமைகளுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் பல.

யாசர் அரபாத் Yasar Arafat
எழுதியவர் Yasar Arafat
Advertisements
 
1 Comment

Posted by on April 21, 2015 in Uncategorized

 

One response to “சிலரது வாழ்த்துகள் உண்மையில் திரும்பிப் பார்க்கவே செய்கின்றன..

 1. தாஜ்...

  April 22, 2015 at 1:21 am

  அன்புடன் யாஸிர் அரஃபாத்…

  கவிஞர் சகோ லறீனா அப்துல் ஹக் அவர்களது விசேச பாராட்டுதல்களை, அரஃபாத் பெற்றிருப்பதில் பெருமகிழ்வு கொண்டேன்.

  சிந்தனையோடு கூடிய சகோ லறீனாவின் மொழி, ஆளுமை மிக்கது! வியப்பளிப்பது!

  ஆளுமைகொண்ட சகோவின் பாராட்டுதல்கள் மகிழத்தக்க விசேசமானதுதான்! அரஃபாத் தன்னைக் குறித்து பெருமையும் கொள்ளலாம். தகும்.

  அந்தப் பாராட்டுதல்களை அரஃபாத் பெற்றுகொள்ளும் அதே நேரம்….,

  மொழி சார்ந்தும், சிந்தனை சார்ந்தும் தேர்ந்த முயற்ச்சிகளை, தொடர்ந்து தனது படைப்புகளில் யாஸிர் அரஃபாத் மெய்ப்பித்துகொண்டே இருத்தல் அழகு!

  இப்படியான முயற்சிகள்தான்… சகோ… லறீனாவுக்கு அரஃபாத் கூறும் நிஜமான நன்றியாக இருக்கும்.

  *
  யாஸிர் அரஃபாத்துக்கு நன் அன்பிற்குறிய அண்ணன்.

  பாசம்கொண்ட என் குறிப்புகள் ஓர் அண்ணனின் கடமை சார்ந்தவை மட்டுமே!. அதனை பெரிதுப்படுத்திப் பார்த்தலும் வீண்.

  முழுமையான ஓர் கவிதையினை அரஃபாத் எழுதி, நான் வாசித்தாலே போதும். என். மனமும் பூத்துவிடும்!

  நன்றி
  -தாஜ்.

   

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: