RSS

Monthly Archives: May 2015

குழந்தைகள் ….!

அனர்த்தம் இல்லாத
குருத்துகள்
ஆசைகள் அரும்பிய
தளிர்கள்
இம்சையை விரும்பும்
ஞானிகள்
ஈசல்போல் கூடித்திரியும்
பறவைகள்
உண்மை துலங்கும்
உரைகற்கள்
ஊசலாடா உள்ளம்கொண்ட
உத்தமர்கள்
எதிலும் ஆர்வம்காட்டும்
ஆர்வலர்கள்
ஏக்கம் இல்லாத
தேவதூதர்கள்

ராஜா வாவுபிள்ளை

Read the rest of this entry »

 

அரிய மருத்துவக் குறிப்புகள் !

அரிய மருத்துவக் குறிப்புகள் !

ஊளைச் சதையை குறைக்க :

சாதாரணமாகத் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைப் பருகி வந்தால் உடம்பில் உள்ள ஊளைச்சதை குறைந்து உடல் வடிவம் அழகு பெறும். சாப்பிடும் உணவில் பூண்டு, வெங்காயம் அதிகமாகச சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் குறைத்து உடலுக்குப் புத்துணர்ச்சி தரும்.

பப்பாளிக்காயைச் சமைத்து உண்டு வந்தால் உடல் மெலியும். இதுதவிர, மந்தாரை வேரை நீர்விட்டு பாதியாகக் காய்ச்சி தொடர்ந்து அருந்தி வந்தாலும் பருத்த உடல் மெலியும். அமுக்கிரா கிழங்கு வேர், பெருஞ்சீரகம் பாலில் காய்ச்சி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

சுரைக்காய் வாரத்திற்கு 2 தடவை சாப்பிட்டு வந்தால் வயிற்றுச் சதை குறையும். மேலும் சதை போடுவதைத் தடுக்க வேண்டுமென்றால், தேநீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் குடித்துவர வேண்டும்.

இதுதவிர, வாழைத்தண்டுச் சாறு, அருகம்புல் சாறு இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து பருகி வந்தாலும் சதை போடுவதைத் தடுக்கலாம். இது எல்லாவற்றிற்கும் மேலாக காலையில் அரை மணி நேரம் நடைப்பயிற்சி மேற்கொண்டால் கொழுப்பும் கரையும், உடல் எடையும் குறையும், புத்துணர்வாகவும் இருக்கும். Read the rest of this entry »

 

நரம்பு தளர்ச்சி குணமடையும் ஆண்மையை வலுவூட்டும் .

ht171நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவரவேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும். Read the rest of this entry »

 

எண்ணங்களும் மௌனமாய்….!

மனவறையில் விழித்திருக்கும்
எண்ண அலைகள்
ஓயாமல் ஓங்காரமிடும் மௌனமாய்….!

உணர்வலைகளில் ஓங்கிவரும்
எண்ணஎழுச்சிகள்
ஒழுகாமல் ஒடுங்கிவிடும் மௌனமாய்….! Read the rest of this entry »

 

பெண்ணின் புகழினை பாடினா(ல்)ள் !

கிழக்கு மண்ணிலே பிறந்தே -நல்ல
கவிதை யெழுதினால் சிறந்தே !
முயற்சியுடன் பா விதைத்தா(ல்)ள் -பொல்லா
பொறாமைக் காரர்களை விரட்டினா(ல்)ள் !

நற் கவிகளைப் படைத்தா(ல்)ள் பெண்
அடிமைத் தலையினை புதைத்தா(ல்)ள்
ஆசிரியத் தொழிலினை செய்தா(ல்)ள் -வீணே
அரட்டை அடிப்போரை சபித்தா(ல்)ள் ! Read the rest of this entry »

 

என்ன செய்யப் போகிறீர்?

என்ன செய்யப் போகிறீர்?

தமிழில்: அபூ ஹாஜர்
அரசர்கள் முரசறைந்தனர்

அன்று, இன்றோ

அதிபர் ஒருவர் ஆணையிடுகிறார்.

நாகரீகம் வளர்ந்ததென

நாங்கள் எப்படி நம்புவது?

நரவேட்டையும்

நாடுபிடிக்கும் வேட்கையும்

நசிந்து விட வில்லையே!

யுத்தத்திற் கெதிராய்

நித்தம் ஆர்ப்பரிக்கும், சகலரின்

சப்தங்களும், சங்கு நெறிபட்டு

நிசப்தங்களாகின்றன.

சண்டியர்களின் சவடால் மட்டும்

சாகாவரம் பெறுகின்றன.

Read the rest of this entry »

 

இன்வெர்ட்டர் – ஒரு சிறிய அலர்ட்!

ஒரு இனிய வெள்ளி மாலைப் பொழுது, வீட்டில் கணவர், இரண்டு வயது மகள், எல்லோரும் அமர்ந்திருக்கையில், பள்ளி முடிந்து வந்தான் மகன். வருகையிலேயே, என்ன வீட்டில் நாறுது என்று கேட்டவாறே அமர்ந்தான். எனக்கும், கணவருக்கும், குழந்தைக்கும் வெயிலின் தாக்கத்தால் ஜலதோஷம் என்பதால், ஒன்றும் தெரியவில்லை.

பத்து நிமிடங்களில் வீட்டை அல்லோகலப் படுத்தினான். உங்க யாருக்கும் ஸ்மெல் தெரியலையா, வீட்டுக்குள்ள இருக்கவே முடியல, “சென்னை’ல குப்பைத்தொட்டிய தாண்டும் போது நாறுற மாதிரி இருக்கு வீடு” என அவன் சொன்னதும் இருவரும் அதட்டினோம். “நீ போய் குளிச்சிட்டு வா” என. வந்தவன், மீண்டும் அலறினான், இருக்கவே முடியல, குமட்டுது என. ஜன்னல்களை அடைத்தான், வீடு முழுவதும் ரூம் ஸ்ப்ரே அடித்தான், செண்ட் எடுத்து உடலில் பூசினான்… பத்தி ஏற்றினான்… எல்லாம் முடித்து விட்டு சொன்னான், இப்பொழுது பரவாயில்லை என.

Read the rest of this entry »