RSS

நேரமிருக்கின்றது…….? நேரமில்லை…!

03 May

வாய்க்கு ருசியாக,

வயிறு நிறைய சாப்பிட நேரமிருக்கிறது….

*
நேரம் போவது தெரியாமல்

செல் போனில் பேச நேரமிருக்கின்றது…….

*
கண்ணாடி முன் நின்று,

பல மணி நேரம் அலங்காரம் செய்ய நேரமிருக்கிறது…

*
தொலைகாட்சி பெட்டி முன் அமர்ந்து கண்கள் சிவக்க

படம், சீரியல் மற்றும் கிரிக்கெட் பார்க்க நேரமிருக்கின்றது.

*
பிறர் நொந்தாலும் பரவாயில்லை,

தனக்கு நேரம் நேரம் போகவேண்டும் என்பதற்காக

வீண் பேச்சுக்களை பேச நேரமிருக்கிறது……

*
எவ்வளவு சம்பாதித்தாலும்,

இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று

பணத்தாசை பிடித்து, மேலும் சம்பாதிக்க நேரமிருக்கிறது…

*
பேஸ் புக்கிலும், டுவிட்டரிலும் புகுந்தால்

நேரம் போவதே தெரியாமல், தெரிந்தவர்களிடமும்,

தெரியாதவர்களிடமும் அனைத்தையும்

பகிர்ந்து கொள்ள நேரமிருக்கிறது…….
*
ஆனால்,

இறைவனை வணங்குவதற்கும்,

வேத புத்தகங்களை படிப்பதற்கும் மட்டும்

பலருக்கு நேரம் கிடைப்பதில்லை…….
*
எனதருமை சமுதாயமே…… சிந்தியுங்கள்……

*
இனியும் நாட்களையும், வயதையும் வீணாக கடத்தாமல்

இறைவனை வணங்குவோம்…..11201893_10152857570793450_6348783353917760530_n

*
மறுமைக்காக

ஏதேனும் நல்ல விஷயங்களை கொண்டு செல்வோம்…

*
“நேற்றைய பொழுதை கழித்த பலர் இன்றில்லை…
*
இன்றைய பொழுதை கழிக்கும் நாம்,

நாளை இருப்பது உறுதியில்லை”………..

11081503_10152765803608450_7831692754341547452_nமுல்லை. மு.மன்சூர் அலி.

Advertisements
 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: