RSS

You are being watched!

06 May

11210451_10153265357961575_4790896222379840502_nபொதுமக்களிடம் நேரடியாகப் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு, அவர்களின் பணி நேரத்தில் நடைபெறும் உரையாடல்களைப் பதிவு செய்யும்படியான ஒரு டிஜிட்டல் கேமரா பொருத்தப்பட்ட ‘பேட்ஜ்’ துபை போலீஸ் அதிகாரிகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

சோதனை முறையில் 80 போலீஸ் அதிகாரிகளுக்கு இந்த ‘பேட்ஜ்’ கொடுக்கப்பட்டுள்ளதாம்.

காவலர்கள் பொதுமக்களிடன் கண்ணியமாக நடந்து கொள்கின்றனரா? அவர்களின் தேவை முறையாக நிறைவேற்றப்படுகிறதா என்று அறியவும், அதேவேளையில், பொதுமக்களும் அதிகாரிகளுடன் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை அறியவும், ஆதாரமாகவும் இந்தப் பதிவுகள் இருக்கும் என்கிறது துபை காவல்துறை.

இதை அணிந்திருப்பவரால், இதில் பதிவாகும் நிகழ்ச்சிகளை மாற்றவோ / அழிக்கவோ முடியாதவண்ணம் அதிநவீன தொழில்நுட்பம் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளதாம்.

பொதுமக்களுக்கு அவர்களின் உரையாடல் பதிவாகிறது என்கிற செய்தியினை காவலர் முன்கூட்டியே சொல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.

“இதன் மூலம் அனைவரும் உரிமையும் சமமாக மதிக்கப்படும்” என்ற பொதுமக்களின் கருத்து ஓங்கி வரவேற்பு அதிகமாகியுள்ளதாம்.

“சிறந்த சேவை தருவதே எங்களின் இலட்சியம்” துபை காவல்துறை தெரிவித்துள்ளது.

படம்:- நன்றி துபை போலீஸ்

10463006_10152464576066575_8128992156402105534_nRafeeq Friend
Advertisements
 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: