RSS

கடைசி நிமிடக் கேள்வி

09 May

இறக்கப் போரவனே நில்
உன் கணக்கை முடித்.து விட்டு போ

காலதேவனின் கடைசி நிமிடக் கேள்வி
எண் சாண் உடல் சுமந்து
எதையுமே கொண்டுவராமல்
எல்லையில்லா சுகம் கண்டாயே
கிடைத்த உன் ஆயுளில் உன் பங்குக்கு
எதை நீ விட்டு வந்தாய்…
………………….******…………………..

காலக்கணக்கரே வாருமய்யா
கணக்கு முடிக்கும் தருணம்
கணக்கு கேட்டு வந்தவரே
என் கழுத்து நெறித்து
கணக்கு கேட்கும்தைரியம்
உனக்கு மட்டுமே உள்ளதய்யா..!!

காளையர் பருவம் தொடாத
என் கையில்
கடப்பிதழும் பயணச்சீட்டும் தந்த பெற்றோர்
கோழையாய் கண்ணீர் மல்கி
நின்ற போது

குழைதள்ளிய வாழைக்கு
ஒரு குடமேனும் நீர் இரைக்க
விடை பெறா விடலை பருவம்
விட்டுத்தான் வந்தேனய்யா..

தலை கொஞ்சம் நிமிர்ந்தேன்
தங்கை நின்றால் வரனுக்காய்

சொன்னாலே வாய் சுடும்.
அரபு தேச மணல் சுமந்தகாசில்
என் கண்ணால் கூட காண முடியா அவள்
கல்யாண வைபோகம்.

ஊரெல்லாம் பெரும் விருந்து
உண்ணாமல் உறங்காமல்
உடல் மட்டும் சுமந்து
உயிர் மட்டும் அங்கு
விட்டுத்தான் நொந்தேனய்யா..

கால் நூற்றாண்டு கடத்து
காவிரியில் நீர் வெள்ளம்.
கருப்பு நிற கனவுகள்
கலராய் மாறின என் கண் முன்.

ஓரிலக்கத்தில் உருண்ட என் வாழ்க்கையை
ஈரிலக்கமாக்கின என் திருமணம்.
ஒருவருக்கொருவர்
புரிந்துகொள்ளா தருணம்
மறு முனையில் அரபியின்
அவசர அழைப்பில்

மீண்டும் கணவுகளை மட டுமே சுமந்து
கண்ணீரில் அன்பை விட்.டுத்தான் சென்றேனய்யா.

கிடைத்த வாய்ப்புகளில்
கிடைத்தன இரு செல்வங்கள்
அழுது புலம்பி பெற்ற போது கூட
அவளிடத்தில் நானில்லை.

அடிக்கடி அழைக்கும்
தொலைபேசியில் மட்டும்
அன்பின் அழகிய மழலை குரல் கேட்பேன

“அப்பா நான் ஸ்்கூலுக்கு போரேன்
அப்பா நான் பாசாகி விட்டேன்
அப்பா அம்மா அடிக்கிறாள்”

பாசாங்கிற்காய் அவர்கள் முன்
என்னவளை திட்டும்போது
அவள் மட்டுமேயறிந்த
பொய் புன்னகை
விட்டுத் தான் நொந்தேனய்யா..

காலம் தந்த பேரமுதம்
நான் மட்டும் பருகாமல்
ஞானம் வந்த. காரணத்தால்
எனை நாடியோருக்கும் கொஞ்சம்
விட்டுத்தான் வந் தேனய்யா.

பேருக்கு வாழ்ந்த வாழ்வில் கிடைத்த
சில நல்லவற்றை
நாளை சந்ததியனியரின் வேருக்காகவும்
விருட்சமிட கொஞ்சம் விட்டுத்தான் வந்தேனய்யா..
வீணுக்காய் நேரம் கடத்தாமல்
விரைந்து என் கணக்கை தீருமய்யா..

காலக் கணக்கரே
என் கணக்கில் ஏதும் பிழை இருக்காது
பார்க்கும் உன் கண்களிலிருந்தால்
கண்ணாடி போட்டு கூட்டி பாரும்
கண்ணாடி நனைந்து போனால்
உன் கண்ணீருக்கு நான் பொறுப்பல்ல…..
………. .. ………………………….
அயல் தேசம் வாழும் என் அன்புச்சொந்தங்களுக்காக.

527719_226539397488105_1760055782_nதமிழ் பிரியன் நசீர்

9774_481016638707045_4385823257274463630_n

Advertisements
 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: