RSS

Monthly Archives: July 2015

ஐயா அப்துல் கலாம் அவர்களின் எளிமையும், பண்பும் என்றும் என்னிலிருந்து அகலாதவைகள்.- தங்கர் பச்சான்

11817251_890197091050035_7741788021413770357_n

ஐயா அப்துல் கலாம் அவர்களை சந்திக்க விருப்பம் தெரிவித்து மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். பத்தாவது நிமிடத்திலேயே உடனே நேரம் ஒதுக்கி ஒருமணி நேரத்திலேயே புறப்பட்டு வரச்சொல்லி பதில் வந்தது. .குடியரசுத்தலைவர் மாளிகையில்தான் சந்தித்தேன்.எனக்கு ஒதுக்கப்பட்டது பத்து நிமிடங்கள்தான். ஆனால்,சந்திப்பு முடிந்து வெளியில் வரும்போது 52 நிமிடங்கள் இருவரும் பேசியிருந்ததாக ஐயாவின் உதவியாளர் சொன்னார். Read the rest of this entry »

Advertisements
 

உங்கள் தேடுதலை எளிமைப்படுத்த இணையதளங்கள் /Links to other websites

computer+kidimages

Read the rest of this entry »

 

விடாமுயற்சியின் வெற்றி வெளிச்சத்தில்…

-கவிஞர் சீர்காழி இறையன்பனார்

எதைத் தவிர்க்க வேண்டும் எதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற உய்த்துணர்கின்ற அறிவும் ஆற்றலும் தன்னம்பிக்கையும் அவசியத் தேவையாகும். என்றும் இளைஞர்களுக்குக் கலங்கரை விளக்கத்தைப் போல நிலையாக, சரியான திசையைக் காட்டிக் கொண்டிருக்கிறது. தேவையான எழுச்சியையும் ஆர்வத்தையும் கொடுக்கும் ஓர் அற்புதமான சக்தி தன்னம்பிக்கை, தளரா முயற்சி, ஓயா உழைப்பு இம்மூன்றும் உயர் இலட்சியத்தை அடைய அடிப்படையாக அமைந்ததாகும்.

ஒவ்வொரு படைப்புக்கும் இறைவன் ஒரு நோக்கத்தை வைத்தே பூமிக்கு அனுப்பியிருக்கிறான். அந்த உயரிய மனிதப் படைப்பின் நோக்கம் தெரிந்து அறிந்து செயல்பட்டால் தான் வெற்றி உண்டு. மனப்போராட்டத்திற்கும் சந்தேகக் கண்ணோட்டத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு இலக்கை நோக்கி ஆர்வத்துடன் பயணிக்க வழி வகுப்பதுடன் கனவுகள் நிறைவேறுவதற்கு உறுதுணையாக இருக்கும் சக்தி தன்னம்பிக்கையாகும். Read the rest of this entry »

 

கல்வியில் இல்லை தவிர்ப்புகள் கற்றல் என்பதே முடிவுகள்…!

கல்வியில் இல்லை தவிர்ப்புகள்
கற்றல் என்பதே முடிவுகள்…!

மகாராஷ்ட்ர அரசு ஒரு பிரச்சினைக்குத் தீத் தூவி இருக்கிறது.
வேதப் பாட சாலைகளுக்கு மற்றும் மதரஸாக்களுக்கு உரிய உரிமங்களைப் பறித்து விட மராட்டிய அரசு முடிவு செய்திருக்கிறது.

மாநில அரசு உதவிகளையும் மானியங்களையும் பெறத் தகுதி பெறும் கல்வி நிலையங்கள் மாநில அரசின் கல்வித் திட்டங்களுக்கு உட்பட்டே செயல்பட வேண்டும். இப்படி அரசு முடிவெடுப்பதில்
முழுமையான நியாயம் இருக்கிறது.

மாநில அரசின் மானியம் பெறும் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களின் பாடத் திட்டத்தில் கல்வித்துறையின் பாடமுறைகளைப் பின்பற்றுவது ஓர் கட்டாயம்தான்.

வேதப் பாட சாலைகளில் சமஸ்கிருதத்தை மொழிப்பாடமாகப் பயிற்றுவிப்பதற்குப் பூரண உரிமை உண்டு. அதே போல மதரஸாக்களில் அரபி மொழிப் பாடத்தைப் பயிற்றுவிக்கவும்
பரிபூரண உரிமை உண்டு.

வேதப் பாட சாலையில் இந்துத்துவா முழுமையாகச் சொல்லித் தரப்பட வேண்டும். மதரஸாக்களில் இஸ்லாமியத்துவம் பூரணமாகக் கற்றுத்
தரப்பட வேண்டும். இவைகளில் பிரச்சனையில்லை.

ஆனால் அந்த இரு கல்விக் கூடங்களிலும் நிச்சயமாகக் கணிதம், விஞ்ஞானம், சமூகவியல், பொருளாதாரம், அரசியல் போன்ற பாடத் திட்டங்களும் கட்டாயமாக இருந்தாக வேண்டும். இதை ஏற்க மறுக்கும் கல்வி நிலையங்கள் உரிமத்தை உடனடியாக ரத்துச் செய்வது அரசின் கட்டாயக் கடமைதான்.

மத போதனைக் கூடங்களிலும், மார்க்கக் கல்விக் கூடங்களிலும்
உலகியல் கல்விக்குத் தடையுள்ளது என மதவுணர்வாளர்கள் முடிவெடுத்தால் அதனை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளவே முடியாது.

இஸ்லாத்தில் கொள்கை ரீதியாக ஒரு தெளிவிருக்கிறது. Read the rest of this entry »

 

11150155_641317702678817_5042132360962182085_nஎட்டிப் பிடிக்கும் விதமறிந்தால் உன்பதத்தைக்
கட்டிப் பிடிப்பேனென் கண்ணே மணோண்மணியே..!!

-குணங்குடி மஸ்தான் சாஹிபு அப்பா.

மஸ்தானப்பா தன் ஞானக்காதலியை,
தன் ரட்சகனின் பதத்தை ,
எட்டிப்பிடிக்கும் வழி தெரியவில்லையே என்று புலம்புகிறார்கள்.

இறைக்காதலைத் தவிர்த்து ஏனைய எல்லாக் காதலுமே துயரம்தான் என்கிறார்கள் மெளலானா ரூமியவர்கள்

கைப்பற்ற முடியாத இடங்களில்தான் பெரும்
பிரயத்தனம் செய்துகொண்டிருக்கிறோம் Read the rest of this entry »