RSS

Monthly Archives: August 2015

இன்பமும் துன்பமும்

உலகத்தில் நாம் பரவலாக பார்க்கும்போது இன்பமும் துன்பமும் இருக்கிறது. இந்த உலகத்தில் மனிதனுக்கு, விருப்பத்திற்கு உட்பட்டவைகளும் சம்பவிக்கின்றன. ஆக இன்பம் துன்பம் விருப்பு வெருப்புகள் ஆகிய எல்லாமே நிறைந்ததுதான் வாழ்க்கை. ஆனால் உலகில் ஒவ்வொரு தனி மனிதனும் “நம் வாழ்வில் இன்பமும் இருக்கிறது. துன்பமும் இருக்கிறது. எது அதிகம்? என்று தன்னைத்தானே கேட்டுக் கொள்ளும் போது” ஒவ்வொருவனும்90% க்கு மேல் இன்பத்தை அனுபவிக்கிறார்கள். ஒரு 10%க்கும் குறைவாகவே துன்பம் அவனது வாழ்வில் அவ்வப்போது தலை காட்டுகிறது” என்பதை புரிந்து கொள்வான்.

எப்போதும் வயிற்று வலியால் ஒருவன் துடித்துக் கொண்டிருப்பதில்லை. எப்போதாவது அஜீரணக் கோளாறு ஏற்பட்டு வயிற்றுவலி ஏற்படுகிறது. எப்போதும் ஒருவன் பசியோடு இருப்பதில்லை. எப்போதாவது ஓரு மனிதன் வியாதியிலேயே உழல்வதில்லை. எப்போதாவது சில சமயம் மருத்துவரைப் பார்க்க வேண்டிய நிலமை ஏற்படுகிறது. எப்போதும் ஒருவன் சட்டச் சிக்கலில் மாட்டிக் கொள்வது இல்லை. எப்போதாவது சில நேரங்களில் வக்கிலைப் பார்க்க வேண்டிய நிலமை ஏற்பட்டு விடுகின்றது. Read the rest of this entry »

Advertisements
 
 

எடை அதிகரிக்க விருப்பமா?

By vayal
உடல் எடை அதிகமாக இருப்போர், அதை குறைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றனர். சிலர் என்ன தான் உணவுகளை உண்டு உடல் எடையை அதிகரிக்க நினைத்தாலும், எடை மட்டும் கூடாமல் இருக்கும். எடையை அதிகரிக்க, அதிகளவு கலோரி நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்

.
ஏனெனில், சரியான அளவு ஊட்டச்சத்துக்கள், புரோட்டீன், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகள் உடலுக்கு கிடைத்தால் தான், விரைவில் உடல் எடையை கூட்ட முடியும். எனவே, எந்த உணவுகளை உட்கொண்டால், உடல் எடை அதிகரிக்கும்.
புரோட்டீன்: புரோட்டீன் அதிகம் இருக்கும் உணவுப் பொருட்களான இறைச்சி, மீன்கள், முட்டை, வான் கோழி, சிக்கன் போன்றவற்றை அதிகம் தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையை அதிகரிக்க நினைப்போருக்கு எளிதான வழி. அதிலும் சோயா பொருட்களை அதிகம் சேர்த்துக் கொண்டால் நல்லது. Read the rest of this entry »

 
 

துணுக்குகள்..

affஇறத்தல்
இழப்பில்லை
இரத்தல்
இழுக்கு..

அன்பு
உலகாழும்
அதுவன்றி
உலகுவீழும்..! Read the rest of this entry »

 
 

பூமிக்கடியில் விளையும் கிழங்கு வகைகளின் மருத்துவ பயன்கள்

ht3137
பீட்ரூட்: பீட்ரூட் ஆனது சிவப்பு அல்லது நாவல் நிறத்தில் இருக்கும். இதனை செங்கிழங்கு அல்லது அக்காரக்கிழங்கு என்றும் கூறுவர். இது சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும், மலச்சிக்கலை குணப்படுத்தி வயிற்றை ஆரோக்கியமாக வைக்கும். உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும், உடலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும், எலும்புருக்கி நோயில் இருந்து பாதுகாக்கும்.

முள்ளங்கி: முள்ளங்கியானது கசப்பு தன்மை வாய்ந்தது. இதை சமைக்கும்போது ஒருவகை வாடை வரும் எனவே பலர் இதை வெறுத்துவிடுகின்றனர். ஆனால் இதன் மருத்துவ பயன்களை உணர்ந்தவர்கள் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். முள்ளங்கியானது தொண்டை சம்பந்தமான நோயை குணமாக்குவதோடு, குரலை இனிமையாக்குகிறது. பசியை தூண்டக்கூடியது, சிறுநீர் அடைப்பை போக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. மேலும் வெட்டை நோய், முடி உதிர்தல் ஆகியவற்றை குணப்படுத்த வல்லது. முள்ளங்கி சூப் குடித்தால் நரம்பு சுருள்கள் நீங்கும். அதிக நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ள முள்ளங்கியில் உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துகளும் தாது உப்புகளும் நிறைந்துள்ளது. Read the rest of this entry »

 
 

ஏழைகளின் முந்திரி

Peanutsஎங்கும் எப்போதும் எளிதில் கிடைக்கும் வேர்க்கடலையில் நிறைய சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன.
இதில் உள்ள புரதம் சரிவிகிதமாக அமைந்துள்ளது. எனவே, குழந்தைகள் வளர்ச்சிக்கு இது மிகவும் உதவுகிறது.
சேயாபீன்சிற்கு அடுத்து தரமான உயர்ந்த புரதமும், முட்டையில் உள்ளதைவிட இரண்டரை மடங்கு அதிகமான புரதமும் வேர்க்கடலையில் உள்ளது.

மூளைச் சுறுசுறுப்பிற்கு உதவும் பாஸ்பரஸ், உப்பு மற்றும் பற்கள், எலும்புகளின் பலத்திற்கு தேவையான கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஈ, நியாஸின் போன்ற வைட்டமின்களும் வேர்க்கடலையில் உள்ளன.

எல்லாவிதமான ரத்தப்போக்கை தடுக்கும் சக்தியும் இதற்கு உண்டு. அதனால், பெண்கள் மாதவிடாய்க் காலத்தில் வேர்கடலை சாப்பிடுவது நல்லது. Read the rest of this entry »

 
 

உற்சாகமாக இருப்பது எப்படி?

உற்சாகமாக இருந்தால் உலகையே ஆளமுடியும். ஆனால் உற்சாகமாக இருப்பது எப்படி? என்பதுதான் பலருக்கும் தெரியாது!
சோகத்தில் மூழ்கி, உற்சாகமிழந்து மனச்சோர்வுடன் வாழ்வதால், வாழ்க்கை ஜொலிக்காது. மனதை எப்பொழுதும் உற்சாகமாக வைத்துக் கொள்ள வேண்டும். மன உற்சாகமாக இருக்க வெற்றியின் வெளிச்சம் அதில் பரவவேண்டும். வெற்றிக் கனிகளைப் பறிப்பதற்கு முயற்சியின் கைகள் உயர வேண்டும். முயற்சியின் கைகள் உயர்வதற்கு இலட்சியம் நமக்கு உந்துசக்தியாக இருக்க வேண்டும்.

ஆகவே உற்சாகமாக இருக்க விரும்பினால் முதலில் உங்களுடைய எதிர்காலம் குறித்து ஆழமாகச் சிந்தித்து ஒரு தெளிவான இலட்சியத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். அதை அடைவதற்காக செயல் திட்டங்களைத் தீட்டி முயர்சிகளை மேற்கொள்ளுங்கள். ஓடுகின்ற நதிதான் உற்சாகமாக இருக்கிறது வளர்கின்ற செடிதான் அழகில் ஜொலிக்கிறது. அதுபோல உழைக்கின்ற மனிதர்கள் தான் உற்சாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கிறார்கள். ஆகவே எப்பொழுதும் உழைத்துக் கொண்டே இருக்க இலட்சியத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
பறக்கின்ற போதுதான் மின்மினிகள் ஜொலிக்கின்றன. அதுபோல உழைக்கின்ற போதுதான் மனிதர்கள் ஜொலிக்கின்றார்கள். மனதை எப்பொழுதும் உற்சாகமாக வைத்துக் கொள்ள கீழ்காணூம் உத்திகளைக் கடைப்பிடிக்கலாம்! Read the rest of this entry »

 
 

மனிதநேயம் நிலைத்திடுமே….!

நெஞ்சுக்கு நிம்மதி வேண்டுமானால்
நச்சுகளை அகற்றிடுவோம்
நாலும் அறிந்திடுவோம்
நேர்வழி செல்வோமே

வாழ்வினில் வளம் வேண்டுமானால்
சோம்பலை அகற்றிடுவோம்
சோர்ந்திடாது உழைத்திடுவோம்
செல்வம்வந்து சேர்ந்திடுமே Read the rest of this entry »