RSS

நெஞ்சிலே நினைவு வைப்பீர்

14 Sep

முகநூலில் என்னை இணைத்துக் கொண்ட 2010களில்…..

பிரமாண்டமான கலச்சார சீர்கேட்டுக்கு நம் இளைய சமூகத்தைக் காட்டாற்று வெள்ளமென இணயதளங்கள் அடித்துச் சென்று கொண்டிருப்பதைக் கண்டு எழுதிய கவிதை இது.

இப்போது இன்னமும் ஏன்,இனியும் ஏராளமானவர்கள் தெளிந்து கொள்ள வேண்டிய விஷயம் இது:

இணைய தளம்: ஓர் எச்சரிக்கை!
————————————————–

அறிவுடை நண்பர்க்கெல்லாம்
அன்புடன் வேண்டிக்கொள்ளும்
நிறை மனதுடையேன் வணக்கம்!
நெஞ்சிலே நினைவு வைப்பீர்:

கணினியைக் கையில் கொண்டு
கற்றிடும் அறிவி னோடு
இணைய தளங்கள் தேடும்
இதயங்கள் அறிவ தாக!:

இதுவரை உலகம் காணா
இனியதாம்இம் ‘முகநூலில்’
‘எதுவரை செல்’வ தென்னும்
இலக்கினை வகுத்து கொண்டு-

‘ஒருவருக் கொருவர் அறிவை
உணர்த்திடும் பரிமாற்றங்கள்
பருகிட மட்டும்’ என்றே
பயன் கொளச் செய்தல் நன்றாம்!

இளங்கன்று போலே இங்கு
இளைஞரும் இளங் கன்னியரும்
களங்க மற்றிருந்த போதும்
கணினியோ களங்கம் செய்யும்:

காட்சிகள்;கருத்துக் கெட்டக்
காமத்தைத் தூண்டும்;தீய
சாட்சிகள்; சண்டா ளர்தம்
சமத்துவக் கொள்கை எல்லாம்-

தடை யின்றிப் பார்ப்பதற்கும்
தயவின்றிச் சேர்ப்பதற்கும்
கடைவிரித் திருப்ப தாலே
கவனம்நாம் கொள்ள வேண்டும்!

நல்லதைப் பார்க்க வேண்டும்;
நல்லதைப் படிக்க வேண்டும்;
நல்லதை எழுத வேண்டும்;
நல்லதே அனுப்ப வேண்டும்!

படித்தவர்;பண்பு மிக்கோர்;
பழுதிலாக் குடும்ப வாழ்வு
படைத்தவர்; பாரம் பரியம்
பார்க்கவே நினைப்போ ரெல்லாம்-

கருத்திதைப் பதிய வைப்பீர்;
கவனமோ கவனத்தோடு;
உரைத்திடும் எனக்கு உண்மை
ஒருபடி மேலே தெரியும்!

புதுமையைப் பகிர்ந்து கொள்வோம்;
புகுவதில் நிமிர்ந்து செல்வோம்;
எதுவெல்லாம் மனித நேயம்
ஏற்குமோ,எடுத்துக் கொள்வோம்!

நல்லதைச் சொல்லுகின்றேன்;
நாட்டுக்கே சொல்லுகின்றேன்;
இல்லையேல் எதிர் காலத்தில்
இந்தியா மரித்துப் போகும்!

நட்புடன்,
கிருஷ்ணன்பாலா

11921707_1153380324691604_5996877837353353428_nKrishnan Balaa
Advertisements
 
Leave a comment

Posted by on September 14, 2015 in Uncategorized

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: