RSS

Monthly Archives: December 2015

நாங்கள் பிழைப்பு தேடி வந்த எங்கள் நாடு ….கத்தார்

நாங்கள் பிழைப்பு தேடி வந்த எங்கள் நாடு ….கத்தார்

தெளலதுல் கத்தார் ….யென்று அரபியில் பெருமிதத்தோடு அழைப்பப்படும் நாடு கத்தார்

மிகச்சிறிய பரப்பளவும் மக்கள் தொகையும் கொண்ட நாடு இது

எங்கு சென்றாலும் ….
அன்த ஹிந்தி
அன்த அஜ்னபி ……அதாவது
நீ இந்தியன்
நீ வேற நாட்டுக்காரன் ………யென்ற பிரிவினையெனும் வார்ததை இதுவரை கேட்டிராத வித்தியாசமான அரப் நாடு கத்தார்

மனிதநேயத்தை மட்டுமே தன் மூச்சாய் நினைக்கும் மகாராஜாக்களை கொண்ட நாடு கத்தார் …………..ஆம் Read the rest of this entry »

Advertisements
 
Leave a comment

Posted by on December 18, 2015 in Uncategorized

 

வியர்வைத் துளிப்பாக்கள் ….!

உழைப்பின் உதிரம்
துளிர்ப்பது
உடலில் உரம்
வளர்ப்பது

+++++++++++++++++++++++++++

நோய்களை உடலைவிட்டு
துரத்துவது
ஆரோக்யத்தை மனிதற்கு
வழங்குவது

++++++++++++++++++++++++++++ Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on December 16, 2015 in Uncategorized

 

வெளியீட்டு விழா

12366237_1003855672970539_2581402244151931192_nநண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

எனது நூல் வெளியீட்டு விழாவுக்கு வருகை தருமாறு அன்புடன் அழைக்கிறேன்.

பேஸ்புக் நண்பர்களே நூல்கள் உருவானதன் காரணம், பேஸ்புக் தோழி நான் ராஜாமகள்தான் நூல் வெளிவருவதன் காரணம், பேஸ்புக் நண்பர்களின் தோழா தோழி திருவிழாதான் நூல் வெளியீட்டு விழாவுக்குக் காரணம்.

எனவேதான் அழைப்புகளும் பேஸ்புக்கிலேயே விடுக்கிறேன். தனி அழைப்பிதழ் ஏதும் இல்லை. இந்த அழைப்பினையே நேரில் அழைத்ததாய் ஏற்று வருகை தாருங்கள், வாழ்த்துங்கள்.

நான் பெரிதும் மதிக்கிற பத்திரிகையாளர் ஞாநி நூலை வெளியிட இருக்கிறார். சக்கரக்காலன் நூலுக்கு அட்டைப்பட ஓவியம் வரைந்து தந்த ஓவியர் முத்துசாமி, எனது கேரிகேச்சரை வரைந்து தந்த சுரேஷ் சீனு – இவர்களும் பேஸ்புக் நண்பர்கள்தான். மூவருக்கும் என் நன்றி.

எல்லாருக்கும் என் அன்பு.

10583959_1003451913010915_2680439243860035439_n
Shah Jahan
 
Leave a comment

Posted by on December 16, 2015 in Uncategorized

 

ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சி – ஓர் அனுபவம்

ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சி – ஓர் அனுபவம்

சென்னை புத்தகக் கண்காட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளாகக் கலந்து கொண்டு பெற்ற அனுபவமும், ஆனந்தமும் என்றைக்கும் மறக்க இயலாதது. பொருளீட்ட வேண்டிய நிர்பந்தத்தின் காரணமாக விமானம் ஏறி துபாய் வந்தபோது, இனி வரும் காலங்களில் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கலந்து கொள்ள இயலாமல் போய்விடுமே என்ற கவலைதான் மற்ற எல்லாக் கவலைகளையும் விட பெரும் கவலையாக மனதை ஆட்கொண்டிருந்தது.

அந்தக் கவலைக்கு அருமருந்தாக அமைந்தது ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சி தந்த அனுபவம். உலகின் மிகப்பெரிய நான்கு புத்தகக் கண்காட்சிகளில் ஒன்றான ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சியானது ஷார்ஜாவின் ஆட்சியாளர் மேதகு டாக்டர் ஷேக் சுல்தான் பின் முஹம்மது அல் காஸிமியின் வழிகாட்டுதலின்படி கடந்த 1982ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on December 15, 2015 in Uncategorized

 

இதயம் இல்லாத இயற்கை

திருப்பூர் மாவட்டத்தில் உள்ளது அவினாசி. அருகே அவினாசிலிங்கம் பாளையம். அங்குள்ள பனியன் கம்பெனி ஓனர் மணி. ஒரே மகன். பெயர் முகில்.

கோவை சூலூரில் உள்ள கேந்த்ரிய வித்யாலயா பள்ளியில் படித்து வந்தான். அருகே உள்ள அப்பம்மா பூவாத்தாள் வீட்டில் தங்கி இருந்தான்.

சென்னை மக்கள் மழை வெள்ளத்தில் தத்தளித்த காட்சிகளை டீவியில் பார்த்த முகில் மனம் உடைந்து போனான். ஏதாவது உதவி செய்யணும் பாட்டி என்று பூவாத்தாளிடம் புலம்பினான்.

உங்க அப்பாவை கேளுடா, வழி சொல்லுவான் என்றார் பாட்டி. அப்பாவிடம் பேசினான். மகனின் மனிதாபிமானம் அப்பாவின் இதயத்தை தொட்டது. கணிசமான தொகை கொடுத்து என்ன தேவையோ வாங்கி அனுப்பு என்றார். Read the rest of this entry »

 
 

மனமார்ந்த வாழ்த்துகள் Vaa Manikandan. -கே. என். சிவராமன்

மனமார்ந்த வாழ்த்துகள் 10383085_1022105447811383_7666291755494381263_nVaa Manikandan. அதிகம் பழக்கமில்லை. கொஞ்சமாகக் கூட உரையாடியதில்லை. நேரில் ஹாய், ஹலோ, புன்னகை தவிர வேறு எதுவும் செய்ததில்லை. என்றாலும் அதிகம் வியக்க வைக்கிறார். குறிப்பாக ‘நிசப்தம்‘ அறக்கட்டளை வழியாக.
இப்படியொரு அறக்கட்டளையை, தான் தொடங்கப் போவதாக அவர் அறிவித்தபோது தனிப்பட்ட நண்பர்கள் குழாமிலும் உள்ளுக்குள்ளும் வாய்விட்டு சிரித்து நக்கல் அடித்திருக்கிறேன். Read the rest of this entry »