RSS

மனமார்ந்த வாழ்த்துகள் Vaa Manikandan. -கே. என். சிவராமன்

09 Dec

மனமார்ந்த வாழ்த்துகள் 10383085_1022105447811383_7666291755494381263_nVaa Manikandan. அதிகம் பழக்கமில்லை. கொஞ்சமாகக் கூட உரையாடியதில்லை. நேரில் ஹாய், ஹலோ, புன்னகை தவிர வேறு எதுவும் செய்ததில்லை. என்றாலும் அதிகம் வியக்க வைக்கிறார். குறிப்பாக ‘நிசப்தம்‘ அறக்கட்டளை வழியாக.
இப்படியொரு அறக்கட்டளையை, தான் தொடங்கப் போவதாக அவர் அறிவித்தபோது தனிப்பட்ட நண்பர்கள் குழாமிலும் உள்ளுக்குள்ளும் வாய்விட்டு சிரித்து நக்கல் அடித்திருக்கிறேன். ஆனால், அவரது தொடர்ச்சியான செயல்பாடு யோசிக்க வைத்தது. கிண்டல் நக்கல் அடித்ததற்காக கூனிகுறுகவும்.
மாதந்தோறும் வங்கிக் கணக்கை – பரிவர்த்தனையை – பொதுவில் வைக்கிறார். உதவி பெறுபவரின் புகைப்படங்களை முடிந்தவரை பகிராமல் தவிர்த்து அவர்களது சுய கவுரவத்தை காப்பாற்றுகிறார்.
இன்னும் சில ஆண்டுகளில் ‘நிசப்தம்‘ அறக்கட்டளை வழியே குறைந்தது நூறு பட்டதாரிகளாவது வெளியே வருவார்கள். அந்தளவுக்கு உரிய மதிப்பெண் பெற்று பொருளாதார நிலை காரணமாக கல்லூரிக்கு செல்ல முடியாத மாணவ / மாணவிகளுக்கு தேடித் தேடி உதவுகிறார்.
இந்த விஷயத்தில் அவர் பின்பற்றும் வழிமுறையை தனிப்பட்ட அனுபவத்தில் இருந்தே குறிப்பிட்டாக வேண்டும்.
இரு மாணவிகளின் கல்லூரி கட்டணத்துக்காக அவரை தொடர்பு கொண்டிருக்கிறேன். தொலைபேசியிலோ அல்லது இன்பாக்ஸிலோ அல்ல. முகநூலில் tag மூலம்.
அதையே அழைப்பாக ஏற்று சம்பந்தப்பட்ட நபர்(கள்) உண்மையிலேயே பொருளாதார நிலையில் பின்தங்கியவர்தானா என தீர விசாரித்து, அவர்களது மதிப்பெண்ணை ஆராய்ந்து உரிய கல்லூரியில் அறக்கட்டளை வழியாக கட்டணம் செலுத்தி…
இது ஒரு சோறு பதம் மட்டுமே.
கல்வி என்றில்லை… முடிந்த வரை சகல நிகழ்வுகளிலும் ‘நிசப்தம்‘ பங்கேற்கிறது. தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்கிறது. பாதிக்கப்பட்டவர்களுடன் கைகோர்க்கிறது.
இதோ இப்போது கூட சென்னை – கடலூரில் மாநில அரசின் அலட்சியம் – கன மழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன் அறக்கட்டளை மூலம் உதவுகிறார்.
வாழ்த்துகள் வா.மணிகண்டன்.

11221938_10208206897439709_1987256964633472676_nகே. என். சிவராமன்
Advertisements
 
 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: