RSS

Monthly Archives: January 2016

பகுத்தறிய மறவாதே..!!

வஞ்சகம் தனையேயுண்டு
வருத்தித் தலைக் கொய்யும்
நஞ்சையே நற்பாலென மடியேந்தி
வெண்ணிறத் தோலணிந்த
விஷம நரிகளுண்டு யிங்கே…

பஞ்செனத் துருத்தியப்
பருத்த மடியது கண்டு
பசுவெனவே யெண்ணி நீயும்
பாலறுந்தத் துணியாதே மறந்தும்
பகுத்தறிய மறவாதே..!! Read the rest of this entry »

 
 

குவைத்தில் நடைப்பெற்ற சீரத்துன் நபி சிறப்பு மாநாட்டில் …

குவைத்தில் கடந்த வாரம் மிஸ்க் அமைப்பினர் ஏற்பாட்டில் நடைப்பெற்ற சீரத்துன் நபி சிறப்பு மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துக்கொண்ட என் அன்பிற்கினிய அருமை அண்ணன் ஏம்பல் தஜம்முல் முகம்மது அவர்களின் தூது வந்த வீரர் எனும் நூலை கண்ணியத்துக்குரிய ஹஜ்ரத் கான் பாகவி அவர்கள் வெளியிட்டார்கள்.
இந்த நூலை அறிமுகம் செய்து பேசிய அண்ணனின் செய்திகள் வியப்புக்குரியது.
இந்தப் புத்தகம் தாமஸ் கார்லைல் எனும் ஆங்கிலேய தத்துவமேதை
பெருமானார்(ஸல்) அவர்களைப் பற்றி ஆற்றிய உரைகளின் தொகுப்பு.
19 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் இங்கிலாந்தில் முஸ்லிம்களே அங்கு இல்லை எனும் நிலைதான் இருந்தது. அந்த காலக்கட்டத்தில் இஸ்லாத்தைப் பற்றியும் பெருமானரைப் பற்றியும்
மிகவும் தவறானக் கருத்துக்களைப் பேசியும் எழுதியும் வந்துள்ளனர். Read the rest of this entry »

 
 

மனசே …மனசே …

-ஜே.பானு ஹாரூன்

மரிக்காத மனசுக்குள் ..
செரிக்காத நினைவலைகள் …
உரிக்காத வெங்காயத்தின் ..
உள்ளிருக்கும் அழுகல் போல் …
நல்லதெல்லாம் மற்றவர்க்கு செய்வோம் ..
நமக்குள்மட்டும் அடித்துக்கொண்டு சாவோம் ..
நஞ்சை ஊட்டி ஊட்டி வளர்க்கிறோம் …
பிஞ்சு மனதிலெல்லாம் பிரிவினைகளை…
கற்கும் பாடமெல்லாம் அப்போதே மறக்கிறது ..
வீம்பும் ,வீராப்பும் விஞ்சியே நிற்கிறது …
மறைமட்டும் ஒன்று …
மாற்றங்கள் இரண்டா ?…
மாற்றம் வேண்டும்தான் …
மாறுதல்கள் தேவைதான் !…
எவற்றிலெல்லாம் என்றொரு நியதி வேண்டாமா ?..
மார்க்கத்தில் அடித்துக்கொள்ள மனசும் வரலாமா ?…

J Banu Haroon-ஜே.பானு ஹாரூன்
 
 

அழுகையின் குரல்

ஒரு தொழிலதிபர், தன் ஒரே மகனை மருத்துவ ஆலோசனைக்காக என்னிடம் அழைத்து வந்தார்.
அவர் சொன்னார்…
“ஒரே மகன், பல மருத்துவர்களை பார்த்து விட்டேன். பயம் அகலவில்லை. திருமணம் செய்து, குடும்பம் நடத்த இவன் தகுதி உள்ளவன் தானா என்ற ஐயப்பாடு எனக்கு உள்ளது. நீங்கள் சோதித்து முடிவை சொல்ல வேண்டும்”
மகனை அழைத்து வந்து அறிமுகப் படுத்தினார்.
பரிசோதனை முடிவில் அவர் பயப்படும் அளவில் விபரீதம் எதுவும் இல்லை என்பதை தெளிவு படுத்தினேன். ஒன்றிரண்டு கவுன்சிலிங் முடிந்த பிறகு அந்த இளைஞன் சகஜ நிலைக்கு திரும்பி விட்டான். திருமணத்தை மிகவும் தடபுடலாக நடத்தினார் அந்த தொழிலதிபர். Read the rest of this entry »

 
 

ஒவ்வொரு பயணமும் ஏதாவது ஒரு புது அனுபவம்

ஒவ்வொரு பயணமும் ஏதாவது ஒரு புது அனுபவத்தையும் நீங்கா நினைவுகளையும் நம்முள் உருவாக்கிச் செல்கிறது. எதார்த்தமாக சந்தித்தோம், அந்தச் சந்திப்பு எங்கள் இருவருக்கும் நாங்கள் இருவருமே திட்டமிடாத
ஒரு பயணத்துக்கு
வழியேற்படுத்தியது.அந்தப் பயணம் எங்களை அலெக்சாண்டிரியாவைக் காணும் வாய்ப்பை அளித்தது.

நண்பர் கனிச்சி யுசினோ ஜப்பான் நாட்டுக்காரர், வயதில் என்னில் இளையவர்,வரலாற்றுத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.

எனக்கு ஜப்பானியர்களின் கலாச்சாரத்தின் மீதும் அவர்களின் திட்டமிட்ட உழைப்பாற்றலிலும் கொண்டிருக்கும் மரியாதையை அவரிடம் பகிர்ந்துக் கொண்டேன்,
மிகவும் மகிழ்ந்தார். Read the rest of this entry »