RSS

ஒவ்வொரு பயணமும் ஏதாவது ஒரு புது அனுபவம்

01 Jan

ஒவ்வொரு பயணமும் ஏதாவது ஒரு புது அனுபவத்தையும் நீங்கா நினைவுகளையும் நம்முள் உருவாக்கிச் செல்கிறது. எதார்த்தமாக சந்தித்தோம், அந்தச் சந்திப்பு எங்கள் இருவருக்கும் நாங்கள் இருவருமே திட்டமிடாத
ஒரு பயணத்துக்கு
வழியேற்படுத்தியது.அந்தப் பயணம் எங்களை அலெக்சாண்டிரியாவைக் காணும் வாய்ப்பை அளித்தது.

நண்பர் கனிச்சி யுசினோ ஜப்பான் நாட்டுக்காரர், வயதில் என்னில் இளையவர்,வரலாற்றுத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.

எனக்கு ஜப்பானியர்களின் கலாச்சாரத்தின் மீதும் அவர்களின் திட்டமிட்ட உழைப்பாற்றலிலும் கொண்டிருக்கும் மரியாதையை அவரிடம் பகிர்ந்துக் கொண்டேன்,
மிகவும் மகிழ்ந்தார்.

ஜப்பானியர்களின் நற்பண்புகளைப் பற்றி என் தாய் மாமா மூலம் நிறைய அறிய முடிந்ததால் ஜப்பானியர்களுக்கு என் மனதில் மரியாதையும் அன்பும் இயல்பாகவே ஆட்கொண்டுவிட்டது.

எங்களது ஆறு மணி நேர கார் பயணத்தில் இரு நாட்டின் பழக்க வழக்கம், உணவுப் பழக்கங்கள்,பார்க்கவேண்டிய இடங்கள் என பல விஷயங்களைப் பரிமாறிக்கொண்டோம்.

கெய்ரோவிலிருந்து அலெக்சாண்டிரியா செல்லும் வழியெங்கும் நிறைந்திருக்கும் ஆரெஞ்சுத் தோட்டங்களையும் இறங்கிப் பார்த்தும் பழங்களைச் சுவைத்தும் பயணம் தொடர்ந்தது.

மொத்தத்தில் கண்ணுக்கும்,செவிக்கும் நாவுக்கும் பெரும் விருந்து இந்தப் பயணம்.

கடைசியாக விடைப்பெறும்போது தொடர்புக்கு மின்னஞ்சல் தந்தார். முகநூல், டிவிட்டர் கணக்கு இருந்தால் முகவரி தாருங்கள் என்றேன்.

மன்னிக்கவும் நான் முகநூல், டிவிட்டர் உபயோகிப்பதில்லை என்றார்.

Mohamed Salahudeen

 

Advertisements
 
 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: