RSS

அழுகையின் குரல்

04 Jan

ஒரு தொழிலதிபர், தன் ஒரே மகனை மருத்துவ ஆலோசனைக்காக என்னிடம் அழைத்து வந்தார்.
அவர் சொன்னார்…
“ஒரே மகன், பல மருத்துவர்களை பார்த்து விட்டேன். பயம் அகலவில்லை. திருமணம் செய்து, குடும்பம் நடத்த இவன் தகுதி உள்ளவன் தானா என்ற ஐயப்பாடு எனக்கு உள்ளது. நீங்கள் சோதித்து முடிவை சொல்ல வேண்டும்”
மகனை அழைத்து வந்து அறிமுகப் படுத்தினார்.
பரிசோதனை முடிவில் அவர் பயப்படும் அளவில் விபரீதம் எதுவும் இல்லை என்பதை தெளிவு படுத்தினேன். ஒன்றிரண்டு கவுன்சிலிங் முடிந்த பிறகு அந்த இளைஞன் சகஜ நிலைக்கு திரும்பி விட்டான். திருமணத்தை மிகவும் தடபுடலாக நடத்தினார் அந்த தொழிலதிபர்.
ஒரு நாள், என்னை காண தனியாக வந்தார் அவர். நான் செய்த உதவிக்கு நன்றி தெரிவித்த அவர், சூட்கேஸை திறந்து, கட்டு கட்டாக பணத்தை வாரி எடுத்து என் மேஜை முன் வைத்தார். நான் திகைத்தேன். பணத்தை ஏற்றுக் கொள்ள மறுத்தேன். கண் கலங்கினார் அவர். “எவ்வளவு பெரிய உதவியை மிகவும் சாதாரணமாக செய்து தந்து இருக்கிறீர்கள். நான் தரும் பணத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள். என்னிடம் பணத்தை தவிர, தருவதற்கு வேறு எதுவும் இல்லை.” பீரிட்டு எழுந்த அவரது அழுகையை நிறுத்துவதற்குள் எனக்கு போதும் போதும் என்றாகி விட்டது.

12400784_10205454693075241_4338340613239561330_n (1)Vavar F Habibullah

Advertisements
 
 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: