RSS

குவைத்தில் நடைப்பெற்ற சீரத்துன் நபி சிறப்பு மாநாட்டில் …

14 Jan

குவைத்தில் கடந்த வாரம் மிஸ்க் அமைப்பினர் ஏற்பாட்டில் நடைப்பெற்ற சீரத்துன் நபி சிறப்பு மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துக்கொண்ட என் அன்பிற்கினிய அருமை அண்ணன் ஏம்பல் தஜம்முல் முகம்மது அவர்களின் தூது வந்த வீரர் எனும் நூலை கண்ணியத்துக்குரிய ஹஜ்ரத் கான் பாகவி அவர்கள் வெளியிட்டார்கள்.
இந்த நூலை அறிமுகம் செய்து பேசிய அண்ணனின் செய்திகள் வியப்புக்குரியது.
இந்தப் புத்தகம் தாமஸ் கார்லைல் எனும் ஆங்கிலேய தத்துவமேதை
பெருமானார்(ஸல்) அவர்களைப் பற்றி ஆற்றிய உரைகளின் தொகுப்பு.
19 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் இங்கிலாந்தில் முஸ்லிம்களே அங்கு இல்லை எனும் நிலைதான் இருந்தது. அந்த காலக்கட்டத்தில் இஸ்லாத்தைப் பற்றியும் பெருமானரைப் பற்றியும்
மிகவும் தவறானக் கருத்துக்களைப் பேசியும் எழுதியும் வந்துள்ளனர்.
இதைக் கண்டு வெறுப்புற்ற தாமஸ் கார்லைல் உண்மையை மக்களுக்கு உணர்த்தும் விதத்தில் பெருமானாரைப் பற்றி சொற்பொழிவு நிகழ்த்துகிறார்.
அதுவும் அவரது சொற்பொழிவுகளுக்கு
நாடகம், சினிமாவுக்கு கட்டணம் கொடுத்துச் சென்று பார்ப்பதுப்போல்
அவரது சொற்பொழிவு அரங்குகளுக்கு நுழைவுக் கட்டணம் செலுத்தி மக்கள் அவரின் சொற்பொழிவுகளைக் கேட்டனராம்.
தாமஸ் கார்லைல் அவர்களின் சொற்பொழிவுகளின் தொகுப்பே இந்நூல். இந்த அரியத் தொகுப்பை சீரிய முறையில் பெரும் சிரத்தை எடுத்து தமிழிலேமொழியாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறார்கள்.
இந்தப் புத்தகத்தின் இறுதியிலே இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் அவர்கள் இஸ்லாம் பற்றி ஆற்றிய உரையின் மொழிப்பெயர்ப்பும் இணைக்கப்பட்டிருப்பது சிறப்பு.
தாமஸ் கார்லைல் பெருமானரைப் பற்றி சொன்னக் கருத்து அவரின் மொழியில்;
“It is great shame for anyone to listen to the accusation that Islam is a lie and that Muhammad was a fabricator and a deceiver. We saw that he remained steadfast upon his principles, with firm determination; kind and generous, compassionate, pious, virtuous, with real manhood, hardworking and sincere. Besides all these qualities, he was lenient with others, tolerant, kind, cheerful and praiseworthy, and perhaps he would joke and tease his companions. He was just, truthful, smart, pure, magnanimous and present-minded; his face was radiant as if he had lights within him to illuminate the darkest of the nights; he was a great man by nature who was not educated in a school nor nurtured by a teacher as he was not in need of any of this”.

Mohamed Salahudeen
—————-


இரண்டு சமுதாய சிந்தனையாளர்களோடு
ஒரு மாணவனாக..
ஒரு எளிய ஊழியனாக..
முழுப் பொழுதும் உடனிருக்கக் கிருபை செய்த இறைவனுக்கே எல்லாப் புகழும்.

Mohamed Salahudeen முஹம்மது சலாஹுத்தீன்Mohamed Salahudeen

 

Advertisements
 
 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: