RSS

Category Archives: கேள்வி ? பதில்கள் !

ஜெயலலிதா இந்தியாவிலேயே அறிவில் சிறந்த முதலமைச்சரா?

“இந்தியாவிலேயே அறிவில் சிறந்த முதலமைச்சர் ஜெயலலிதா” என மன்மோகன்சிங் குறிப்பிட்டாராமே? – வெற்றிச்செல்வன், பொட்டல்புதூர்.

மெத்தப் படிக்கும் யாரும் அறிவாளி ஆகலாம்.”இந்தியாவிலேயே திறமையான முதலமைச்சர்” என, பிரதமர் புகழ்வதுதான் பெருமையே தவிர அறிவாளி எனப் புகழ்வதில் சத்தில்லை.

சொத்துக்குவிப்பு வழக்கை இழுத்தடிக்கும் ஒருவரை அறிவாளி எனப்புகழ மன்மோகன்சிங்குக்கு என்ன நிர்பந்தமோ?

மன்மோகன் சிங் தொலைபேசி உரையாடலில் அவ்வாறு கூறி இருந்தாலும் அதை மன்மோகன் சிங் தமது வாயால் வெளிப் படுத்துவதே முதல்வர் பதவியில் வீற்று இருக்கும் ஜெயலலிதாவுக்கு அழகேயன்றி, அரசின் செய்திக் குறிப்பு மூலமாக தெரிவிப்பது முறையன்று.


வாகனத்தில் ஆம்புலன்ஸ் என்ற ஆங்கில வார்த்தையை ஏன் தலை கீழாக எழுதுகிறார்கள்? – அப்பாவு ஆறுமுகம், அருப்பு கோட்டை.

தலைகீழாக எழுதுவதில்லை; வலமிடமாகத் திருப்பி எழுதுவர்.

பிறரது கவனத்தைச் சட்டென ஈர்க்க வித்தியாசமாக எதையாவது செய்தாக வேண்டுமே?

2006-2011 வரை நடைபெற்ற நில அபகரிப்பு வழக்குகள் மட்டும் விசாரிக்கப்படும் என்பது அரசியல் அசிங்கம் அல்லவா? – நிலா, சென்னை.

ஜெயலலிதா மீதே கொடநாடு சிறுதாவூர் எனப்புகார்கள் இருக்கின்றனவே?

கடந்த தி மு க ஆட்சிக்காலத்தில் நடந்தவை மட்டும் விசாரிக்கப்படும் என்பது அரசியல் அசிங்கம்தான். அரசியல் நோக்கத்தோடு புனையப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கை எனத் தி மு கவினர் புலம்புவதை உண்மையாக்கிவிடுவாரோ ஜெயலலிதா?

அ இ அ தி மு க ஆட்களின் மீது வரும் புகார்களையும் நேர்மையாகப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்தால்தான் அவரது நம்பகத்தன்மை வலுப்படும்.

கைது செய்யப்பட்டுள்ள தி மு கவினர் மீது விரைந்து வழக்கு நடத்திக் குற்றவாளிகள் எனில் தண்டனை வழங்கவும் நிரபராதிகள் எனில் விடுதலை வழங்கவும் அரசு விரைந்த முயற்சியில் ஈடுபடவேண்டும். ஜெயலலிதா தம் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை இழுத்தடிப்பதுபோல இவர்களுக்கும் வாய்ப்பை ஏற்படுத்திவிடக்கூடாது. Read the rest of this entry »

 

Tags:

கனிமொழிக்கு மட்டும் பிணை மறுக்கப்படுவதேன்?

புவி வெப்பமயமாதல், புவி வெப்பமயமாதல் என்று பரபரப்பாக சில காலத்திற்கு முன்பு பேசப்பட்டதே வ.மு அய்யா.  இப்போது அது பற்றிய பேச்சையே காணோமே.  புவி வெப்பமயமாதல்  குறைந்து விட்டதா? அல்லது நின்று விட்டதா? – கணேசன், சீர்காழி.

புவி வெப்பமயமாதல் குறையவில்லை; ஆனால் அதைப் பற்றிய பரபரப்பான செய்திகள் குறைந்து விட்டன.

புவி வெப்பநிலை அதிகரிப்பதற்கு  இயற்கையான  காரணங்கள் உண்டா அல்லது மனித சமூகத்தால்  உருவாக்கப்படும் வாயுக்கள் காரணமா என்பது இன்னும் நிச்சயிக்கப்படவில்லை. சிலர் இயற்கையைச் சொல்லும்போது மற்றும் சிலர் மனிதனால் உருவாக்கப்படும் கார்பனைச் சொல்கின்றனர்.

புவி வெப்பமயமாவதால்  துருவப் பகுதிகளில் இருக்கும் பனிமலைகள் உருகிக் கடலின் நீர் மட்டம் அதிகமாகிப் பல நகரங்கள்  மூழ்கும் ஆபத்து ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. மாலத்தீவு, ஹாலந்து போன்ற நாடுகள் இதில் முதலிடத்தில் உள்ளன. நம் தமிழ்நாட்டின் சென்னை தூத்துக்குடி போன்ற நகரங்களும் இவ்வாபத்தின் அண்மையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும் புவி வெப்பமயமாவதால் தென்மேற்குப் பருவ மழையும் பொய்த்துப் போகும் வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது. மனிதன் அறிவியலில் முன்னேறிக் கொண்டே போய் இயற்கையுடன் போட்டி போடும்போது இயற்கை தன் எதிர்வினையை ஏதாவது ஒரு வழியில் காட்டிவிடுகிறது..


திருச்சி மேற்கு தொகுதி இடைத் தேர்தலில் சசிகலாவே களம் காணப் போகிறாராமே? – ராஜ்குமார், நாகர்கோவில்.

அதில் உங்களுக்கென்ன நட்டம்.?  வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கும் இந்தியக் குடிமகன்/மகள் யாராயினும் தேர்தலில் போட்டியிடலாமே.

சசிகலா போட்டியிட்டு வென்றால் ஜெயலலிதாவுக்கு வீட்டில் இருப்பதைப் போன்ற ஆதரவும் ஆறுதலும் சட்டசபையிலும் கிடைக்கும். சசிகலா துணை முதல்வரானால் ஜெயலலிதா முழு ஓய்வு கூட எடுக்கலாம். Read the rest of this entry »

 

Tags:

பிறந்தநாள், திருமணநாள் வைபவங்கள் கூடாது!

ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

பிறந்தநாள், திருமணநாள் போன்ற வைபவங்களை வீட்டில் உள்ள உறுப்பினர்கள் மட்டும் எளிமையாகக் கொண்டாடி மகிழ இஸ்லாம் அனுமதிக்கிறதா? இத்தகைய வைபவங்களை மனதில் கொண்டு உணவு சமைத்து குடும்பத்தினர் ஒன்று கூடி உண்டு மகிழ்வது மட்டுமே எங்கள் நிய்யத் ஆக உள்ளது. குர் ஆன் ஹதீஸ் ஒளியில் தெளிவுறுத்தவும். நன்றி!

ஜஸாக்கல்லாஹ் கைரன்.

மின்னஞ்சல் வழியாக சகோதரி ரஹ்மத்.

தெளிவு:

வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்…

பிறந்த நாள், திருமண நாள் வைபவங்களைச் சிறப்பித்துக் கொண்டாடுவது ஒருவரைப் பார்த்து மற்றவர் காப்பியடித்து, வழக்கமாக்கிக் கொண்டாதாகும். பிறந்த நாள், திருமண நாள் மட்டுமல்ல இன்னும் மே தினம், காதலர் தினம், மகளிர் தினம் என உலகில் கொண்டாடப்படும் பல தினங்கள் மனிதனாக ஏற்படுத்திக் கொண்டவை! இதற்கும் குர்ஆன், சுன்னாவுக்கும் எந்த ஒட்டுமில்லை! – அதாவது அவை இஸ்லாத்தில் அனுமதிக்கப்படாத கொண்டாட்டங்கள். Read the rest of this entry »

 

Tags: ,

சசிகலா தமிழகத்தின் முதல்வராக வாய்ப்புள்ளதா?

கூட்டு சதி என்ற சி பி ஐ யின் வாதம் கனிமொழியின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் முயற்சியா? – தேவா, கடலூர்.

எந்த வழக்கும் அரசியல்வாதிகளின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைப்பதில்லை. வழக்குகள் வர வர அவர்களின் அரசியல் வாழ்க்கை உறுதிப் படும். சான்றுக்கு ஜெயலலிதாவைக் கூறலாம்.


நடமாடிக் கொண்டிருந்த சாமி செத்துடுச்சே, இனிமே இன்னொரு சாமி வருமா? – ப.கோ. வசீகரன்.

இந்தியாவில் நடமாடிக் கொண்டிருந்தவர் ஒரே ஒரு சாமி மட்டும் அல்லரே? நூற்றுக் கணக்கில் இருக்கின்றார்கள். விளம்பர வெளிச்சமும் புகழும் கொண்டோரும் பலர் இருக்கின்றனர். அதனால் ”இனிமே இன்னொரு சாமி வருமா?” என்ற கவலை வேண்டாம். Read the rest of this entry »

 

Tags: , ,

மனைவிக்கும் துணைவிக்குமுள்ள வித்தியாசம் என்ன?

திராவிடருக்கும் தமிழருக்கும் என்ன வேறுபாடு? பார்ப்பனருக்கும் அந்தணருக்கும் என்ன வேறுபாடு? – முனி, காளையார்கோவில்.

இந்தியனுக்கும் தமிழனுக்கும் வேறுபாடு உண்டா?

திராவிடரில் தமிழரும் அடங்குவர்.  மனித இனத்தில்  நான் ஆண் என்பது போல…

பார்ப்பனர் ஒரு சாதி.. பார்ப்பனர் தம்மை அந்தணர் எனக்கூறிக்கொண்டாலும் அனைவரும் அப்படியல்லர்.

“அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுகலான்” எனும் குறளுக்கேற்ப.. அவர்களுள் ஒரு சில அந்தணர் இருக்கலாம். Read the rest of this entry »

 

Tags: ,

தேர்தலுக்குப் பின் விஜயகாந்தின் நிலை?

வடிவேல், குஷ்பூ, பாக்யராஜ், விந்தியா பிரச்சாரம் செய்தால் மக்கள் வாக்களித்து விடுவார்களா?-கண்ணன், திருநெல்வேலி

கூட்டம் சேர்க்கும் உத்தி!

யாருக்கு வாக்களிப்பது என்பதை மக்கள் முன்னரே முடிவு செய்து விட்டார்கள்.

வடிவேலுவுக்கு விஜயகாந்தை எதிர்ப்பதும் விமர்சிப்பதும் மட்டுமே நோக்கம். அதற்குரிய மேடையையும் ஊடக விளம்பரத்தையும் திமுக தருகிறது.

குஷ்பூவும் பாக்கியராஜும் திமுக உறுப்பினர்கள் என்ற முறையில் விஐபி பிரச்சாரகர்களாகக் களம் இறங்கியவர்கள். Read the rest of this entry »

 

Tags: , ,

சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கரையேறுமா?

முஸ்லிம் லீகிடம் ஒரு தொஹுதியைப் பிடுங்கியது கருணாநிதியின் கூட்டணி துரோகம் என்று சொல்லலாமா? -கலீல், வீரசோழன்.

இப்போது  முஸ்லிம்லீக் மூன்று தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவிப்பு வந்துள்ளது.

தி மு க காங்கிரஸ் கூட்டணி முறியாமல் இருப்பதற்காகத் தாங்களே முன் வந்து டெல்லியில் தங்கள் தலைவர் இ அகமது மூலம் தங்களின் ஒரு தொகுதியைக் காங்கிரஸுக்கு விட்டுக் கொடுத்ததாக முஸ்லிம் லீக் கட்சியினரே பெருமையாக அறிக்கை வெளியிட்டுள்ளபோது, ‘கருணாநிதியின் துரோகம்’ என்ற பேச்சுக்கே இடமில்லை. கடந்த 2006 ஆம் ஆண்டு சட்டமன்றப் பொதுத்தேர்தலிலும் இப்படித்தான் கருணாநிதி முதலில் கொடுத்த மூன்று தொகுதிகளுள் ஒன்றைப் பறித்தார். (பாளையங்கோட்டை)

முஸ்லிம்லீக் கட்சி என அவர்கள் சொல்லிக் கொண்டாலும் தேர்தலில் போட்டியிடுவது உதயசூரியன் சின்னத்தில் என்பதால் அவர்கள் தி மு க வினராகவே கருதப்படுவர். அவர்களுக்கே இல்லாத ஆதங்கம் உங்களுக்கு ஏன்?


தேர்தல் அறிக்கையில் வாக்களித்ததை நிறைவேற்றாத கட்சிமீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியுமா? – D.ஹபீப் – கீழக்கரை.

முடியுமே….. அடுத்த பொதுதேர்தலில் நீங்கள் வேறு கட்சிக்கு வாக்களிப்பதன் மூலம்!


காங்கிரஸுக்கு 63 தொகுதிகள் தர மறுத்த திமுக திடீரென அதற்கு பணிந்ததன் மர்மம் என்ன? தேர்தல் கவலையா அல்லது குடும்ப கவலையா? – எம்.சிராஜ் நெல்லிக்குப்பம்.

சிக்கலின்றித் தேர்தலில்  வெற்றிபெற வேண்டுமே என்ற கவலை.


உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியினர் நடத்திய ஆர்பாட்டத்தில் போலிஸ் ஆடிய ருத்ர தாண்டவத்தைப் பார்த்தீரா? – காவிய மைந்தன், அவுரங்காபாத்.

எல்லா மாநிலங்களிலும் எதிர்க்கட்சி மீது ஆளுங்கட்சி, காவல்துறையைக் கொண்டு நடத்தும் அத்துமீறல்களுக்கு உ  பி என்ன விதிவிலக்கா?

இதுவே தமிழ்நாடாக இருந்திருந்தால் கட்சித் தொண்டர்களும் காவல்துறைக்குத்  துணையாகக் களத்தில் இறங்கியிருப்பர். கடந்தகால வரலாறுகளைப் புரட்டிப் பாருங்களேன்.


அதென்ன உளவுத்துறைக்குச் சிறுபான்மையினர் மீது அப்படியொரு வெறுப்பு, அடிக்கடி அவர்களை குறி வைத்தே புரளிகள் கிளப்பபடுகின்றதே? சமீபத்திய உதாரணம் ‘லவ் ஜிகாத்’! – கனி, பொள்ளாச்சி.லவ்- ஜிகாத் என்றிருப்பதால் உங்கள் வினா  முஸ்லிம்களைப் பற்றி  எனக்கருதுகிறேன்.

ஒட்டுமொத்த உளவுத்துறையையும் அப்படிக் கூறிவிட முடியாது. சில மண்டலங்களில் இருக்கும் தலைமை உளவு அதிகாரிகளின் எண்ண ஓட்டத்திற்கேற்பவும் தங்களது தனிப்பட்ட சார்புகளுக்கேற்பவும் நேர்மையற்ற சில கறுப்பாடுகள் இப்படிப்பட்ட செயலில் ஈடுபடுகின்றன என்பதே உண்மைநிலை.

இவர்கள் தங்கள் துறைகளுக்குத் தகவல் கொடுப்பதை விட ஊடகங்களுக்குப் பரபரப்புச் செய்தி கொடுப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டுவதால் நீங்கள் வினவியுள்ளது போன்ற செய்திகள் மக்களிடையே விரைவில் பரவி ஒருவர் மற்றொருவரை ஐயத்துடனும் வெறுப்புடனும் பார்க்கின்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.

அப்பாவிகள் பயங்கரவாதச் செயல்களில் தொடர்பு படுத்திக் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு  ஐந்தாண்டுகளுக்கோ ஆறாண்டுகளுக்கோ பிறகு அவர்கள் நிரபராதிகள் என விடுதலையானாலும்  அவர்கள் கிடைத்தற்கரிய இளமையையும் கல்வியையும் இழக்க இவர்களைப்போன்ற உளவுத்துறைக் கறுப்பாடுகளே காரணம்.


கசாப்புக்கு சிக்கன் பிரியாணி என்பதைக் கூட தலைப்பு செய்தியாக்கும் மீடியாக்கள் சுவாமி அசிமானந்தாவின் வாக்குமூலம் மற்றும் ஜனாதிபதிக்கு அவரின் வேண்டுகோள் கடிதத்தினைப் பத்திச்செய்தியாக கூட பிரசுரிக்கவில்லையே? – முஸாதிக், வாணியம்பாடி. Read the rest of this entry »

 

Tags: , , ,