RSS

Category Archives: செய்திகள்(news)

கண் இல்லையா? … கண்fidence போதும்!!!

10956981_10153258512606575_3699525270542705157_n

பிறவியிலேயே பார்வையிழந்த 10 வயது சிறுவன், தொலைக்காட்சியில் 30 நிமிடங்கள் செய்திகள் வாசித்து அசத்தியிருக்கிறான்.

கோவையில் பார்வையற்றோருக்கான பள்ளியில் தங்கி, ஐந்தாம் வகுப்பு படித்து வரும் டி.ஸ்ரீராமானுஜம் எனும் மாணவன், தொலைக்காட்சியில் செய்தி வாசிக்க வேண்டுமென்ற தனது நீண்ட நாள் கனவினை நிறைவேற்றியுள்ளான். Read the rest of this entry »

 

Tags:

மக்கள் நலனுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து செயல்படுகிறார் திரு. தாரேஸ் அகமது

10991343_826025437468820_3412730517994130593_n#‎Realhero‬ மக்கள் நலனுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து செயல்படுகிறார் திரு. தாரேஸ் அகமது பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் , இன்று பால்பண்ணை தொழில் செய்யும் விவசாயிகளை அழைத்து குறைதீர்ப்பு கூட்டத்தில் அவர் உரையாற்றினார் அப்போது அவர் தன்னை ஆட்சியராக கருதாமல் சக மக்களாக பகிர்ந்துகொண்டார் அப்போது தேவையான வசதிகளை கேட்டு பெற தனது அலைபேசி எண் கொடுத்து அழைக்குமாறும் தான் எடுக்கமுடியாத பட்சத்தில் குறுந்தகவல் அனுப்புமாறும் கேட்டுக்கொண்டார் ,,,, மேலும் துறை அதிகாரிகளிடம் மக்கள் முன்பே குறைகளை நிறைவேற்றவும் ஆணை பிறப்பித்தார் அதிகாரிகளின் அலட்சியங்களை அப்போதே கண்டித்தார் பால்மாடு வளர்ப்பு தொழிலுக்கு வங்கி கடன் தரவேண்டும் எனவும் உத்தரவிட்டார் , மேலும் கொள்முதல் செய்யும் பால் பண்ணைகளில் ஏதேனும் குறைகள் இருப்பினும் பணப்பட்டுவாடாவில் தாமதம் அளவுகள் குறைப்பு சலுகைகள் வழங்க மறுப்பு டாக்டர்கள் கவனிப்பு குறைவு மானியம் தவிர்த்தல் போன்ற பலவாறு குறைகளை உடனுக்குடன் அறிவிக்கும்படி கேட்டுக்கொண்டார் யாருக்கேனும் பயம் இருப்பினும் அலைபேசியில் அழைத்து குறைகளை கூறுமாறு கேட்டுக்கொண்டார் ,,, எந்தவொரு துறையில் தங்களுக்கு ஏதேனும் குறை இருந்தால் உடனடியாக ஆட்சியர் அலுவலகம் சென்று புகாரினை எழுத்து மூலமாக பதிவு செய்வதோடு அதற்கான ரசீது பெறுமாறு வலியுறுத்தி கூறினார் ,, பெரம்பலூர் மக்களுக்கு இவர் ஒரு பெரிய வரம் ! அவர் செயல் என்னை மிகவும் ஆச்சரியப்பட வைத்தது !

10953285_820366271368070_1875364047615734886_nSathiyananthan Subramaniyan Banumathi
 

பிரெஞ்சு அரசாங்கம் லஸ்ஸானாவை கவுரவித்து உடனடியாக பிரெஞ்சு குடியுரிமை வழங்கியது.

10425882_766833046736278_181568082571794217_n

இப்போதைய பிரெஞ்சு தேசத்து கதாநாயகன்.
பத்து உயிர்களுக்கு மேல்
தன் உயிரை துச்சமாக மதித்து
காப்பாற்றியவர் லஸ்ஸானா.
பிரெஞ்சு அரசாங்கம் லஸ்ஸானாவை
கவுரவித்து உடனடியாக
பிரெஞ்சு குடியுரிமை
வழங்கியது.

ஏழு உயிரை எடுத்தான்
ஒரு முஸ்லிம்.ஆனால் உலகம் ஒரு சமூகத்தையே குற்றவாளி கூண்டில் நிறுத்தியது.

பத்து உயிரை காப்பாற்றினான் மாலியை தாய்நாடாக கொண்ட 24 வயது இஸ்லாமிய இளைஞரான இந்த முஸ்லிம்.லஸ்ஸானா. குடியுரிமை வழங்கும் விழாவில் பிரான்சின் முக்கிய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

இதற்கும் அந்த முஸ்லிம் சமூகத்துக்கும் சம்பந்தமே இல்லையா! அப்படித்தானே!
அட ஒங்க தலையிலே எர்வாமேட்டினை தடவ! அப்பவாவது
முடிக்கு பதில் மூளையாவது வளருதான்னு பார்ப்போம்!

1525355_754789944607255_1409781901140235152_nMohamed Rafiudeen
 

சகுனியின் தாயம்

இதில் ரகசியம் எதுவுமில்லை. ‘கர்ணனின் கவசம்’ நூலின் என்னுரையிலேயே கே.என்.சிவராமன் குறிப்பிட்டு விட்டார். நரேனும், நானும் என்னவென்பதை. அதேதான். ‘சகுனியின் தாயம்’ தொடரிலும் எங்களுக்கு அதே வேஷம்தான்.

2013ஆம் ஆண்டின் இறுதிநாளில் முதல் அத்தியாயத்தை வாசித்தது ஏதோ நேற்று நடந்த போலிருக்கிறது. கிட்டத்தட்ட ஓராண்டுகள் நிறைவடையப் போகிறது. இவ்வாண்டின் தொடக்கத்தில் பொங்கல் இதழில் இருந்து குங்குமத்தில் இத்தொடர் வரத் தொடங்கியது என்று நினைவு. 49வது அத்தியாயத்தை சற்று முன்னர்தான் வாசித்தேன் (குங்குமம் வாசகர்கள் அடுத்த திங்கள் அன்று வாசிப்பார்கள்). 50வது அத்தியாயத்தோடு கதை முடிகிறது. ஒரு வருடமாகவா இந்த தாயத்தை உருட்டிக் கொண்டே இருந்திருக்கிறோம் என்று ஆச்சரியம் மேலிடுகிறது.

துரியோதன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, சகாதேவன் குறித்துக் கொடுத்த முகூர்த்தத்தில் சகுனியின் தாயம் உருள்கிறது. தொடரின் ஆரம்பம் இதுதான். Read the rest of this entry »

 

SMART SAMSUNG!/தகவல் தொழில்நுட்பம்

66187_10153019136766575_5990542199901932524_n2020ம் ஆண்டிற்குள் தமது நாட்டு இளைஞர்களை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத் தொடர்புத் துறையில் வளமான, அறிவுசார் தலைமுறையினாராக உருவாக்க, மலேசிய அரசு தேசியத் திட்டம் ஒன்றை நிறுவி உழைத்து வருகிறது

அத்திட்டத்திற்கு உதவும் வகையில், மலேசியாவின் தேசிய நூலகத்திற்கு, மின்னணுத் துறையில் முன்னணி வகிக்கும் சாம்சங்க் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ”டிஜிட்டல் நூலகம்” எனும் புதிய தொழில்நுட்பத்தை அளித்து உதவியிருக்கிறது.

சாம்சங் தயாரிப்புகளான, TAB, Large format Displays, SMART signage போன்ற 35 உயர் தொழில்நுட்ப சாதனங்களைக் கொடுத்துள்ளது. அவையனைத்தும் தொடுதிரை வசதியுடன் கூடியது என்பது கூடுதல் சிறப்பு.

இந்த நூலகம் மூன்று வலயமாகப் பிரிக்கப்பட்டுள்ளதாம்.
முதல் வலயம், படிக்கும் இடமாகவும்;
இரண்டாம் வலயம் ஊடாடக்கூடிய இடமாகவும்;
மூன்றாம் வலயம் சிறார்களுக்கான இடமாகவும் அமைக்கப்பட்டுள்ளதாம்.

தகவல் தந்தவர் Rafeeq Friend

10463006_10152464576066575_8128992156402105534_n

 

Tags:

பெண்கள் அதிகமாக சிகரெட் வாங்கும் நாடாக இந்தியா !

10258548_10153017151201575_8338264620934283482_nஉலகில் இப்போது இருக்கும் புகைபிடிப்பவர்களின் எண்ணிக்கை அப்படியே இருந்தாலே, இந்த நூற்றாண்டின் இறுதியில் புகைப்பதினால் ஏற்படும் நோய்களுக்குட்பட்டு இறப்போர் எண்ணிக்கை 1பில்லியன் (1000000000 ) என்பதையும் தாண்டுமாம்.

ஆனால், உலகிலேயே பெண்கள் அதிகமாக சிகரெட் வாங்கும் நாடாக இந்தியா வளர்ந்து வருகிறதாம்! http://goo.gl/piuf2i

தகவல் தந்தவர்

10463006_10152464576066575_8128992156402105534_nRafeeq Friend
 

புத்தகக் கண்காட்சியில் வீழ்தலின் நிழல்,அம்மாவின் ரகசியம்’ ,’தலைப்பற்ற தாய்நிலம்’

அன்பின் நண்பர்களுக்கு,

இம் மாதம் எனது ‘இலங்கை முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளும், அவற்றுக்கான பின்னணியும் குறித்த முழுமையான கள நிலவர மற்றும் ஆய்வுத் தொகுப்பு’ நூலான ‘BLACK JUNE 2014’ வெளிவரவிருக்கிறது. வெளிவந்ததும் Creative Commons பதிப்பகம் வெளியிடும் இத் தொகுப்பின் தமிழ் மின்னூலை அனைவருக்கும் இலவசமாகத் தர எண்ணியிருக்கிறேன்.

மற்றும் தற்பொழுது சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சர்வதேச புத்தகக் கண்காட்சியில் எனது கீழ்வரும் புத்தகங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

1555267_10153515097674202_2740753038248619871_n Read the rest of this entry »

 

Tags: ,