RSS

Tag Archives: கருணாநிதி

ஜெயலலிதாவுக்கு நன்றி: கருணாநிதி!

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக தி.மு.க. ஆட்சியில் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை அவரையும் அறியாமல் பட்டியலிட்டுக் காட்டியிருப்பதற்காக நான் நன்றி கூறுகிறேன் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

அனைத்துக் கட்சிக் கூட்டம், சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டம், தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவையில் தீர்மானம், மனித சங்கிலி போராட்டம், பிரதமருக்கு தந்தி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா, “இறுதி எச்சரிக்கை என்ற அறிவிப்பு- என்று இவைகள் எல்லாம் கருணாநிதியின் கண் துடைப்பு நாடகங்கள் என்று சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தில் பேசிய ஜெயலலிதா குறிப்பிட்டிருக்கிறார். Read the rest of this entry »

Advertisements
 

Tags: ,

வைகோவின் அரசியல் — சில நினைவுகள்

மிழ்நாட்டு  அரசியலில் வியப்புக்குறியாய் வளர்ந்து இன்று வினாக்குறியாய் நிற்கும் வைகோ எனத் தொண்டர்களால் அன்புடன் அழைக்கப்படும் வையாபுரி கோபாலசாமி,முப்பத்தைந்து / நாற்பது ஆண்டுகளுக்கு முன் தமிழக இளைஞர்களால் ஆராதிக்கப்பட்டவர். திமுகவில் எம்ஜிஆர், கருணாநிதிக்கடுத்து  கோபாலசாமியின் கூட்டத்துக்குத்தான் தொண்டர்களும் பொதுமக்களும் திரண்டு வருவர். எம்ஜிஆர் திமுகவிலிருந்து விலக்கப்பட்ட பின், ‘கலைஞரின் போர்வாள்’ எனப் புகழப்பட்டவர் கோபாலசாமி.  அவரின் எழுச்சி மிகு உரைகளும் அண்ணாவைப் பின்பற்றி அவர் மேற்கோளிட்டுக் காட்டும் உலக வரலாறுகளும்  இளைஞர்களை அவர்பால் ஈர்த்தன. இதை முறையாகப் பயன்படுத்த திமுக மாணவர் அணியின் இணைச்செயலாளராக அவர் நியமிக்கப்பட்டார். மாணவர் அணிச் செயலாளராக எல்ஜி என அழைக்கப்பட்ட எல்.கணேசனும் இணைச் செயலாளர்களுள் ஒருவராக செஞ்சி ராமச்சந்திரனும் இருந்த போதிலும் – எல்ஜி, விஜி, செஞ்சி என அப்போது அழைக்கப்பட்ட மூவரிலும் கோபாலசாமிக்குத்தான் இளைஞர்களிடம் செல்வாக்கு.

இந்திராகாந்தி தமக்கேற்பட்ட அரசியல் நெருக்கடியால் அகில இந்தியாவிலும் நெருக்கடி நிலையை அமுல்படுத்தினார். அப்போது தமிழ்நாட்டில் கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சி நடந்துகொண்டிருந்தது.நெருக்கடி நிலைக்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தமிழகச்  சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் இந்திராகாந்தி திமுக ஆட்சியைக் கலைத்தார். திமுக தலைவர்களும் முன்னணியினரும் “மிசா”வின்கீழ்க் கைது செய்யப்பட்டனர்.குருவிகுளம்  ஒன்றியத் தலைவராக இருந்த கோபாலசாமியும் மிசாவில் கைது செய்யப்பட்டுப் பாளையங்கோட்டைச் சிறையில் இருந்தார். Read the rest of this entry »

 

Tags: , ,