RSS

Tag Archives: விடுதலை முன்னணி

சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கரையேறுமா?

முஸ்லிம் லீகிடம் ஒரு தொஹுதியைப் பிடுங்கியது கருணாநிதியின் கூட்டணி துரோகம் என்று சொல்லலாமா? -கலீல், வீரசோழன்.

இப்போது  முஸ்லிம்லீக் மூன்று தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவிப்பு வந்துள்ளது.

தி மு க காங்கிரஸ் கூட்டணி முறியாமல் இருப்பதற்காகத் தாங்களே முன் வந்து டெல்லியில் தங்கள் தலைவர் இ அகமது மூலம் தங்களின் ஒரு தொகுதியைக் காங்கிரஸுக்கு விட்டுக் கொடுத்ததாக முஸ்லிம் லீக் கட்சியினரே பெருமையாக அறிக்கை வெளியிட்டுள்ளபோது, ‘கருணாநிதியின் துரோகம்’ என்ற பேச்சுக்கே இடமில்லை. கடந்த 2006 ஆம் ஆண்டு சட்டமன்றப் பொதுத்தேர்தலிலும் இப்படித்தான் கருணாநிதி முதலில் கொடுத்த மூன்று தொகுதிகளுள் ஒன்றைப் பறித்தார். (பாளையங்கோட்டை)

முஸ்லிம்லீக் கட்சி என அவர்கள் சொல்லிக் கொண்டாலும் தேர்தலில் போட்டியிடுவது உதயசூரியன் சின்னத்தில் என்பதால் அவர்கள் தி மு க வினராகவே கருதப்படுவர். அவர்களுக்கே இல்லாத ஆதங்கம் உங்களுக்கு ஏன்?


தேர்தல் அறிக்கையில் வாக்களித்ததை நிறைவேற்றாத கட்சிமீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியுமா? – D.ஹபீப் – கீழக்கரை.

முடியுமே….. அடுத்த பொதுதேர்தலில் நீங்கள் வேறு கட்சிக்கு வாக்களிப்பதன் மூலம்!


காங்கிரஸுக்கு 63 தொகுதிகள் தர மறுத்த திமுக திடீரென அதற்கு பணிந்ததன் மர்மம் என்ன? தேர்தல் கவலையா அல்லது குடும்ப கவலையா? – எம்.சிராஜ் நெல்லிக்குப்பம்.

சிக்கலின்றித் தேர்தலில்  வெற்றிபெற வேண்டுமே என்ற கவலை.


உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியினர் நடத்திய ஆர்பாட்டத்தில் போலிஸ் ஆடிய ருத்ர தாண்டவத்தைப் பார்த்தீரா? – காவிய மைந்தன், அவுரங்காபாத்.

எல்லா மாநிலங்களிலும் எதிர்க்கட்சி மீது ஆளுங்கட்சி, காவல்துறையைக் கொண்டு நடத்தும் அத்துமீறல்களுக்கு உ  பி என்ன விதிவிலக்கா?

இதுவே தமிழ்நாடாக இருந்திருந்தால் கட்சித் தொண்டர்களும் காவல்துறைக்குத்  துணையாகக் களத்தில் இறங்கியிருப்பர். கடந்தகால வரலாறுகளைப் புரட்டிப் பாருங்களேன்.


அதென்ன உளவுத்துறைக்குச் சிறுபான்மையினர் மீது அப்படியொரு வெறுப்பு, அடிக்கடி அவர்களை குறி வைத்தே புரளிகள் கிளப்பபடுகின்றதே? சமீபத்திய உதாரணம் ‘லவ் ஜிகாத்’! – கனி, பொள்ளாச்சி.லவ்- ஜிகாத் என்றிருப்பதால் உங்கள் வினா  முஸ்லிம்களைப் பற்றி  எனக்கருதுகிறேன்.

ஒட்டுமொத்த உளவுத்துறையையும் அப்படிக் கூறிவிட முடியாது. சில மண்டலங்களில் இருக்கும் தலைமை உளவு அதிகாரிகளின் எண்ண ஓட்டத்திற்கேற்பவும் தங்களது தனிப்பட்ட சார்புகளுக்கேற்பவும் நேர்மையற்ற சில கறுப்பாடுகள் இப்படிப்பட்ட செயலில் ஈடுபடுகின்றன என்பதே உண்மைநிலை.

இவர்கள் தங்கள் துறைகளுக்குத் தகவல் கொடுப்பதை விட ஊடகங்களுக்குப் பரபரப்புச் செய்தி கொடுப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டுவதால் நீங்கள் வினவியுள்ளது போன்ற செய்திகள் மக்களிடையே விரைவில் பரவி ஒருவர் மற்றொருவரை ஐயத்துடனும் வெறுப்புடனும் பார்க்கின்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.

அப்பாவிகள் பயங்கரவாதச் செயல்களில் தொடர்பு படுத்திக் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு  ஐந்தாண்டுகளுக்கோ ஆறாண்டுகளுக்கோ பிறகு அவர்கள் நிரபராதிகள் என விடுதலையானாலும்  அவர்கள் கிடைத்தற்கரிய இளமையையும் கல்வியையும் இழக்க இவர்களைப்போன்ற உளவுத்துறைக் கறுப்பாடுகளே காரணம்.


கசாப்புக்கு சிக்கன் பிரியாணி என்பதைக் கூட தலைப்பு செய்தியாக்கும் மீடியாக்கள் சுவாமி அசிமானந்தாவின் வாக்குமூலம் மற்றும் ஜனாதிபதிக்கு அவரின் வேண்டுகோள் கடிதத்தினைப் பத்திச்செய்தியாக கூட பிரசுரிக்கவில்லையே? – முஸாதிக், வாணியம்பாடி. Read the rest of this entry »

 

Tags: , , ,