ஆண்மையற்ற அரசாட்சி

அயல்நாட்டுக்கு நம்மை அடகுவைக்கும்
ஆண்மையற்ற அரசாட்சி – நாளும்
அதுக்கும் இதுக்கும் வரியைப்
போட்டு ஏய்க்கும் விஷப்பூச்சி

உழைச்சு உழைச்சு
உடம்பும் ஓடாச்சு – அட
உழைக்குக் காசும் ஒருவேளை
சோத்துக்கே சரியாச்சு

உழைச்சுக் களைச்சவனுக்கு
ஒண்டவொறுக்  குடிசையில்லை – ஊரை
ஏய்ச்சுப் பிழைச்சவனுக்கு
ஊரெல்லாம் மாளிகைக் கொள்ளை

உலகத்திலே முதலிடம்
உலகவங்கிப் பணத்துல – அங்கேயே
ஊருப்பட்ட வட்டிக்கட்டுறோம்
கடன் வாங்குனக் கணக்குல

என்ன வளம் இல்லை
இந்தத் திருநாட்டிலே – என்
றெழுதி வெச்சதெல்லாம்
கெடக்குது வெறும் ஏட்டிலே

இருப்பதெல்லாம் ஒருத்தருக்கே
என்பதால் வந்தத்தொல்லை – இங்கே
இருப்பதெல்லாம் போதுவெனவைக்க
இறைவன் தேவையில்லை – இருக்கும்
இளைஞரெல்லாம் இணைந்துவிட்டால்
ஆயிரம் சூரியனும் அற்பச்சொள்ளை

இவன் : சக்தி நேரம்

Source : http://sakthispoem.blogspot.comஆண்மையற்ற அரசாட்சி